positron emission tomography (PET) scan
பாசிட்ரான் உமிழ்வு வரைவி (PET) ஸ்கேன், பெட் ஸ்கேன்
தமிழ் விளக்கம்
ஒரு நோயில் பாதிக்கப்பட்ட உள்ளுருப்புக்களைப் படம் பிடித்து, நோயின் பாதிப்பை அறிந்துகொள்ள பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஊடுகதிர் (Scan) படங்கள் எனப்படுகின்றன. தளகதிர்படயியல் (Tomography) என்பது ஒரு தளத்திலுள்ள உடலுறுப்புகளை தெளிவாக அதன் குறுக்கு வெட்டுத் தோற்றமாகக் காணத்துணை செய்யும் ஒரு புதுமையான கருவியாகும். கணினியின் துணையுடன் செயல்படுவதால், இது கணினித் துணையுடனான கதிர்படம் (Computer assisted tomogramm ) என அறியப்படுகிறது. இதனால் உடலின் உள்ளுருப்பைக் குறுக்காக சிறு துண்டாக வெட்டினால் எவ்வாறு தெரியுமோ அப்படி படமாக்க முடியும். பாசிட்ரான் உமிழ்வு தளக்கதிர் படமும் (Positron emission tomogramm) காந்த ஒத்ததிர்வு படமும் (Magnetic resonance image) கூட தளகதிர் படங்களே.
பொதுவாக முப்பரிமாணத்தில் உள்ள உறுப்புகளை இரு பரிமாணத்தில் எக்சு கதிர் (X Ray) படமாகப் பெறும்போது, வெவ்வேறு உறுப்புகளின் படிமங்கள் ஒன்றன் மேல் ஒன்று விழுவதால் படம் தெளிவில்லாமல் போய்விடுகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, உடலில் ஒரு தளத்தில் இருக்கும் உறுப்பை மட்டும் தெளிவாகப் படம் எடுக்கும் முறை தளகதிர் படவியல் (Tomography) என்றும், படம் தளகதிர் படம் (Tomogram) அழைக்கப்படுகிறது. இப்பொழுது இம்முறையைப் பயன்படுத்தும் கணினியுடன் செயல்படும் கருவிகள் (CT) உள்ளன. மேலும் காந்த ஒத்ததிர்வுப் படமுறை (Magnetic Resonance Imaging), மீயொலி (Ultrasound), பாசிட்ரான் உமிழ்வு தளபடமுறை (Positron emission tomography-PET), ஒற்றை ஒளியன் உமிழ்வு தளபடமுறை (Single photon emission tomography-SPECT ) என்று பல கருவிகள் உள்ளன. பாசிட்ரான் உமிழ்வு முறை, குறிப்பிட்ட திசு அடுக்கு சிறப்புக் கதிர் வீச்சு வரைவி என்று சுருக்கமாக PET ((Positron emission tomography) அழைக்கப்படுகிறது. இந்தமுறையில் கதிரியக்கக் குணமுள்ள ஓரகத் தனிமங்களை (radioactive isotopes) உடலில் செலுத்தி அதன் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் போக்கைக் கவனித்து நோயறியமுடியும். புற்றுநோயறிதலில் இது வெகுவாகப் பயன்படுகிறது.

English
A computerized diagnostic device using radioactive isotopes that are injected intravenously to evaluate cerebral metabolism.