postconventional morality
மனச்சாட்சிக்கு ஒப்ப நடத்தல்
தமிழ் விளக்கம்
அறநெறி வளர்ச்சி - சரியானது, தவறானது என்ற தரத்தினடிப்படையில், மதிப்பீடுகள், உணர்வுகள், எண்ணங்களை வளர்த்துக்கொள்வதே அறநெறி வளர்ச்சி எனப்படுகின்றது. ஜீன் பியாஜிஜோவின் அறிவாற்றல் வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு இணையாகச் சொல்லப்பட்டதுதான் லாரன்ஸ் கோல்பெர்க் அவர்களின் அறநெறி / நல்லொழுக்க வளர்ச்சிக் கோட்பாடு. அறநெறி / நல்லொழுக்க வளர்ச்சி எப்படி ஏற்படுகிறது என்பதை லாரன்ஸ் கோல்பர்க் எடுத்துரைத்த மூன்று நிலைகளில் மூன்றாம் நிலை. முதலில் மற்றவர்களின் ஒப்புதல் பெறவும் புறக்கணிப்பைத் தவிர்க்கவும் விதிகளைப் பின்பற்றுகிறவர்கள், பின்னர் அதே விதிகளின் அத்தியவசியத் தன்மை அறிந்து பின்பற்றி, அதைப் பின்பற்ற முடியாதபோது குற்ற உணர்விற்கு ஆளாகும் நிலை. மனிதனுடைய அறநெறி / தார்மீக/ நல்லொழுக்க வளர்ச்சி மூன்று வகைகளாக, ஆறு அடையாளம் காணத்தக்க நிலைகளில் நடைபெறுவதாகக் கோல்பர்க் கண்டறிந்தார்.
1. அறநெறியை அதன் மேன்மையின் பொருட்டுப் பின்பற்றாமல் புலனெறி சார்ந்து (தண்டனை தவிர்க்க, பாராட்டு பெற, தன் மகிழ்ச்கிக்காக) பின்பற்றல். இதை வழக்கமாவதற்கு முந்தைய அறநெறி / நல்லொழுக்கப்ப பிரக்ஞைக்கு முந்தைய நல்லொழுக்கம் (Preconventional Morality) எனலாம். இந்த நிலையில் குழந்தைகள் சில நல்லொழுக்கங்களைப் பின்பற்றினாலும், அதன் முக்கியத்துவம் கருதியோ அதை உணர்ந்தோ செய்வதில்லை. மாறாக சில செயல்களின் விளைவுகளுக்கு அஞ்சியோ அது தரும் மகிழ்ச்சிக்காகவோ செய்யப்படுகிறது. நிலை 1. பணிவதால் கிடைக்கும் பாராட்டிற்கும் அதை மீறுவதால் கிடைக்கும் தண்டனைக்கு பயந்தே குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் நடந்துகொள்கின்றன. நிலை 2. ஒரு செயலைச் செய்வதால் தனக்கு என்ன கிடைக்கும் என்று வெகுளித்தனமான தன்னல நோக்குடன் செய்யப்படும் காரியங்கள்
2. வழக்கமான / இயல்பான / உறுதிப்படுத்தப்பட்ட நல்லொழுக்கம் (Conventional Morality) இதைச் செய்யலாம் இதைச் செய்யலாகாது என்ற சமூக வரையறைகளை விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டு பின்பற்றப்படும் நல்லொழுக்கம். சமூக விதிகளைப் பின்பற்றுவதால் பாராட்டோ, பின்பற்றாவிட்டால் தண்டனையோ கிடைக்காது என்று தெரிந்திருந்தும் ஒழுக்கமாக நடந்துகொள்ளும் நிலை. 3. மற்றவர்களின் அங்கீகாரத்தின் பொருட்டு, மற்றவர்களிடம் இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டி பின்பற்றப்படும் ஒழுக்க நிலை. நல்ல பையனாக, நல்ல பெண்ணாக நடந்துகொள்ள விரும்புதல் நிலை 4. சமூக விதிமுறைகளுக்கும், அதிகாரத்திற்கும் கீழ்ப்படிந்து நல்லொழுக்கமாக நடத்தல்.
3. வழக்கத்தைக் கடந்த / பிறருக்காக அன்றி தானே ஏற்றுக்கொண்டு பின்பற்றும் நல்லொழுக்கம் / சுதர்மம் (Postconventional Morality) மனித உரிமைகள், சமத்துவ நோக்கு, சுதந்திரம், சமூக நீதி போன்ற தார்மீகக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, மற்றவர்களின் அங்கீகாரத்திற்கு ஏங்கிக் கொண்டிராமல், தன் மனச்சாட்சிக்கு ஒப்ப நடத்தல். நிலை 5. நல்லொழுக்கம் என்பது சமூக ஒப்பந்தத்தின்படியும், சட்ட முறைகளின் படியும் நடக்கும் செயலென்று பின்பற்றுதல். நிலை 6. நல்லொழுக்கம் என்பது மனச் சாட்சிப்படி நடத்தல்.

English
In Kohlberg moral development theory, the last two of the six stages of development. In stage five, moral thought is based on understanding the validity of universal moral principles and the social context in which they must operate. In stage six, the individual understands and becomes committed to universal moral principles. These stages, if they occur at all, usually do not do so until the individual is older than age 20.