postplacement contact
இடநிலைப்படுத்தலுக்குப் பின்னான தொடர்பு
தமிழ் விளக்கம்
உதவி தேவைப்படும் ஒரு வாடிக்கையாளருக்கு அந்த உதவியை வழங்கும் நிறுவனத்திலோ அல்லது தனிநபரிடமோ இடநிலைப்படுத்திய பின், அந்த வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புக்கள், தேவைகள் புதிய இடத்தில் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள செய்யப்படும் தொடர்பு. இது பெரும்பாலும் தொலைபேசித் தொடர்பு மூலமாகவோ அல்லது முன்னறிவித்துவிட்டோ அல்லது முன்னறிவிப்பாமலோ சென்று விசாரிப்பதையும் குறிக்கும். வளர்ப்பிடங்களில் விடப்பட்ட குழந்தைகள், நலம் பேணகங்களில் விடப்பட்ட முதியவர்கள், நோயாலோ, நோய்மீண்டு உடல் தேறும் நிலையிலுள்ளவர்கள், குற்றத்திற்காகத் தண்டனை பெற்று இடைக்கால இல்லங்களில் தங்கியிருப்பவர்களை நேரடியாகச் சென்று தொடர்பு கொள்வது நடைமுறை வழக்கம்.
English
Follow-up activity by a social worker or social agency that has facilitated a new placement for a client to ensure that the needs of the placed individual and the new caregiver are being met. The activity normally includes telephoning or personally visiting the client and the caregiver in the new setting. Usually such contacts are prearranged, but in certain circumstances they take place without prior notice. Postplacement contact is most often done in foster care for children; nursing home care for older people; and halfway houses for people who were incarcerated or institutionalized because of illness, disability, or criminal behavior.