posttraumatic stress disorder (PTSD)

அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தச் சீர்கேடு, ஊறுபாட்டை அடுத்த உளவழுத்தக் கோளாறு

தமிழ் விளக்கம்

வழக்கமான மனித அனுபவங்களைக் கடந்து, அசாதாரண நிகழ்வுகளால் ஏற்படும் உளவியல் தாக்கம். விபத்து, இயற்கைப் பேரிடர்கள், இராணுவத் தாக்குதல், கற்பழிப்பு, தாக்குதலுக்குள்ளாதல் போன்ற நிகழ்ச்சிகளை மன அழுத்ததைத் தரும் அசாதாரணமான நிகழ்வுகள் எனலாம். இயல்பாக மனிதர்களுக்கு மன அழுத்ததைத் தரும் தாம்பத்தியப் பிரச்சனைகள், மரணம், நோய் போன்றவை அதிர்ச்சியான சம்பவங்களாகக் கருதப்படுவதில்லை. அதிர்ச்சிக்குறிய சம்பவங்களை எதிர்கொண்டவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியாமை, உணர்வு மழுங்கல், சுரணை இழத்தல், அதீத எச்சரிக்கை உணர்வு, மிரட்சி, துயர் தரும் நினைவுகள், தூக்கத் தொந்தரவுகள், பயங்கரக் கனவுகள் போன்றவை அதிர்ச்சிக்குப் பின்னான விளைவுகளாகும்.

English

A psychological reaction to experiencing an event that is outside the range of usual human experience. Stressful events of this type include accidents, natural disasters, military combat, rape, and assault. Stresses that are not unusual to people, such as marital problems, bereavement, and illness, are excluded from this class of disorders. Individuals may react to these events by having difficulty concentrating; feeling emotionally blunted or numb; being hyperalert and jumpy; and having painful memories, nightmares, and sleep disturbances.