poverty
பற்றாக்குறை, தேவைக்குக் குறைவு, வறுமை, ஏழ்மை, நல்குரவு, இன்மை, பஞ்சம், குறைபாடு, இனப்பொதுப்பண்பு குறைபாட்டு நிலை, இழிதகைமை, சிறுமை, அற்பத்தனம், இல்லாமை, தூவமை
தமிழ் விளக்கம்
ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்குக் கீழ் வாழும் மக்களை ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள் எனலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை வைத்தே ஏழ்மைநிலை மதிப்பிடப்படுகின்றது. இருப்பினும் ஏழ்மை நிலை உணவு, சுத்தமான நீர், உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சமூக வாய்ப்புக்கள், மனித அரசியல் உரிமைகள், பிற சமூகங்களுடன் தொடர்புகளற்ற அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிலையைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் காரணமாக, வறுமை எல்லாச் சமூகங்களிலும் விரும்பத்தகாத ஒன்றாகவே கருதப்படுகிறது.
ஏழ்மை நிலையை absolute poverty அல்லது தீவிர ஏழ்மை நிலை (பிழைத்திருப்பதற்கும் குறைவான வருமானமீட்டு நிலை - ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக்குறைவாக இருக்கும் நிலை) என்றும், relative poverty ஒப்பிடத்தக்க ஏழ்மை நிலை (பெரும்பாலானவர்களின் வாழ்க்கைத்தரத்தை விடக் குறைவான வாழ்க்கைத்தரம் கொண்டிருத்தல் - இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிக்கும்) என்றும், transitional poverty என்பது தற்காலிக வறுமை (வாழ்க்கையின் சில காலகட்டங்களிலோ அல்லது சில சூழ்நிலைகளிலோ எதிர்கொள்ளும் குறுகிய கால ஏழ்மை - ஆதரவற்ற குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள்) என்றும், marginal poverty விளிம்பு நிலை ஏழ்மை (குறைந்த கல்வி மற்றும் குறைந்த திறனால் பாதுகாப்பற்ற, வேலையில்லாத நிலையால் ஏழ்மை நிலையைக் கடந்தும் மீண்டும் ஏழ்மைக்குத் தள்ளப்படும் ஊசலாட்ட நிலை) என்றும், residual poverty எஞ்சியிருக்கும் அல்லது தொடர் வறுமை (நீண்ட காலம் அல்லது தலைமுறை தலைமுறையாக ஏழ்மை நிலையிலிருப்பவர்கள்) என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

English
The state of being poor or deficient in money or means of subsistence. Various types include absolute poverty (below a subsistence level of income) and relative poverty (below the living standard of the person's mainstream community). People who are impoverished may be considered transitional poor (a brief, temporary poverty related to specific events in one's life or environment), marginal poor (moving in and out of poverty because of job insecurity, inadequate skills, or limited education), and residual poor (long-term and intergenerational poverty).