poverty cycle
வறுமை வளையம், வறுமைச் சுழற்சி, வறுமையின் நச்சு வளையம், வறுமைப் பொறி
தமிழ் விளக்கம்
வறுமையின் சுழற்சி என்பது, வறுமைக்குட்பட்ட குடும்பங்கள், வெளி உதவி இல்லாத பட்சத்தில் வறுமையிலே தலைமுறை தலைமுறையாக நீண்டகாலம் வாழும் / சுழலும் நிலை. இதை வறுமையின் நச்சு வளையம் என்றும் சொல்வர். ஒரு குடும்பம் வறுமைக்குள்ளாகும் போது, அந்த வறுமையிலிருந்து மீண்டெழ முடியாதாவாறு சங்கிலித்தொடராக சில நிகழ்வுகள் அமைகின்றன. வறுமைக்குள்ளானவர்கள் கல்வியும் பயிற்சியும் பெறமுடியாததால், அவர்களால் வேலைவாய்ப்பு பெறமுடியாமல் போக, வேலைவாய்ப்பின்மையால் அவர்களால் போதுமான உணவு உண்டு ஆரோக்கியமாக இருக்கமுடியாமல் நோய்வாய்ப்படுவதால், அவர்களின் உற்பத்திதிறன் குறைந்து வருமானமீட்ட முடியாத நிலை ஏற்பட, குறைந்த வருமானத்தைச் சரிக்கட்ட அதிக நேரம் உழைப்பதால், மீண்டும் ஆரோக்கியம் கெட்டு உடலுழைப்பில் ஈடுபடமுடியாமல் போக, வறுமையிலிருந்து மீண்டெழ முடியாத நிலை ஏற்படுகிறது. வறுமையினால் ஏற்படும் மனக்கசப்புகளால் குடும்பத்தில் பிரச்சனைகள் உருவாகி, குடும்பங்கள் சீர்குழைய, அது தீய பழக்கவழக்கங்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் வித்திட, குற்றவாளிகளாகி சிறைசெல்லும் நிலை ஏற்பட்டு, அவர்களின் எதிர்காலம் இருண்டதாகிறது. காலத்திற்கேற்ற அறிவாற்றல், சமூகப் பண்பாட்டுக் கூறுகளை இளைய தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்குமளவு மூதாதையர்கள் இக்குடும்பங்களில் இருப்பதில்லை. இம்மாதிரியான குடும்பங்கள் அரசு உதவியின்றியோ, வேறு வகைப்பட்ட ஆதரவின்றியோ, இச்சுழற்சியிலிருந்து வெளிவரமுடியாது.
English
A pattern of living in which the children of poor families grow up to become poor and raise their own children to also become poor. An implicit and unproven premise, often used by critics of the U.S. welfare system, says that poverty occurs by choice and that some welfare programs foster dependency and teach the children to live the way their parents live.