poverty line
வறுமைக்கோடு, ஏழ்மைக்கோடு, பஞ்சக்கோடு,
தமிழ் விளக்கம்
வறுமைக் கோடு (Poverty line) என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஒரு அளவுகோல் ஆகும். குறைந்த பட்ச நுகர்வுத் தரத்தைக் கூடப் பெற முடியாதவர்கள் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் எனப்படுவர். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தை அடையத் தேவையான குறைந்த பட்ச வருமான வரம்பே வறுமைக்கோடு எனப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வறுமைக் கோடு வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஒருவர் உயிர்வாழத் தேவையான உணவை வாங்குவதற்குத் தேவையான பணமதிப்பைக் கொண்டு வறுமைக் கோடு வரையறுக்கப்படுகிறது.
குறைந்த பட்ச நுகர்வு என்பது பின்வரும் வழிகளில் மதிப்பிடப்படுகிறது. ஒருவர் உயிர் வாழ்வதற்குத் தேவையான தானியம், பருப்பு வகைகள், பால், சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றின் குறைந்தபட்ச அளவு தீர்மானிக்கப்படுகிறது. இப்பண்டங்களின் விலையைக் கணக்கில் கொண்டு தேவைப்படுகின்ற குறைந்த பட்சப் பொருள்களை வாங்குவதற்கான பணம் மதிப்பிடப்படுகிறது. இதுவே ஒருவரின் குறைந்த பட்ச நுகர்ச்சிச் செலவாகும். இது ஒரு ஆண்டிற்குக் கணக்கிடப்படுகிறது. இதற்குச் சமமான வருவாயைப் பெறாதவர்கள் அல்லது இதற்குக் குறைவான வருவாயைப் பெறுபவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவார்கள். இந்தியாவில் குறைந்த பட்ச கலோரி உணவுத் தேவையின் அடிப்படையில் வறுமைக் கோட்டை வரையறுத்துள்ளனர். நகர்ப்புறங்களில் வாழும் ஒரு நபருக்குக் குறைந்த பட்சமாக 2100 கலோரி உணவும், கிராமப் புறங்களில் வாழும் ஒரு நபருக்குக் 2400 கலோரி உணவும் தேவைப்படுகிறது. இவ்வுணவுப் பொருள்களை வாங்கத் தேவையான வருமானத்தைப் பெறாதவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவார்கள்.
இந்தியாவில் வறுமைக் கோடு நிர்ணயம் 1978 ஆரம்பிக்கப்பட்டது. அந்த வருடம் நகரங்களில் ரூ71.30 ம், கிராமங்களில் ரூ 61.80 ம் வருவாயோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஈட்ட முடிந்தால் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டது. அந்தக் காலத்தில் நிலவிய விலைவாசியின் அடிப்படையில் கிராமங்களில் தினசரி 2400 கலோரி உணவும், நகரங்களில் 2100 கலோரி உணவும் வாங்க, உட்கொள்ள அது போதுமானதாக இருந்ததாக ஐதீகம்.
சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி (2009) வரையறையின்படி நகரத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 28.65 கீழே சம்பாதிப்பவர்களும், கிராமத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 22.42 சம்பாதிப்பவர்களும் - வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் (Below Poverty Line - BPL) என்று வரையறை செய்தது. இந்த வறுமைக் கோடு தவறான கோடு. இதன் மூலம் பல ஏழைகள் பலனடையாமல் போக வழி உண்டென்று எதிர்ப்புக் கிளம்பியதால், புதிய வறுமைக்கோட்டை வரையறுக்க சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி அறிக்கையின்படி நகரத்தில் தினம் 47 ரூபாய்க்கும், கிராமத்தில் 32 ரூபாய்க்கும் குறைவாக வருமானாமீட்டுபவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களாகக் கருதப்பட்டனர். கிராமத்தில் 5 நபர் கொண்ட குடும்பத்திற்கு, மாதம் 4860 ரூபாயும் (வருடம் ரூ 57600), நகரத்தில் 7035 ரூபாயும் (வருடம் ரூ 691200) இருந்தால், அவர்கள் ஏழைகளல்ல என்பது இக்கமிட்டியின் கருத்து.
வறுமைக் கோடு என்பது ஏழை யார் என்பதை நிர்ணயம் செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அடையாளம். வறுமைக் கோட்டின் மூலம், ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அளவிடக் கூடாது. மிகவும் அத்தியாவசியமானவைகளைப் பெறும் தகுதி உள்ளவர்கள் யார் என்பதை நிர்ணயிப்பதற்குத் தான் அது உதவ வேண்டும். இது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து ஒருவனின் வாழ்வை உயர்த்த உதவும் கோடு அல்ல. ஏழைக்கு அத்தியாவசியமானவைகளை அளித்து, அவனை வறுமைக் கோட்டிற்கு மேலே வரும்படிச் செய்வது தான் அதன் நோக்கம். அதாவது ஒருவரும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்காத ஒரு நிலையை ஒரு நாடு அதி வேகமாக அடையத் திட்டங்கள் தீட்ட வேண்டியது ஒரு சிறந்த அரசாங்கத்தின் கடமையாகும்.

English
A measure of the amount of money a government or a society believes is necessary for a person to live at a minimum level of subsistence or standard of living. The first measure of this type was issued by the United States in 1964. The original poverty line was calculated by a formula that multiplied the cost of a subsistence food budget (that is, minimum market basket) by a factor of three. Since 1989 the poverty line has meant the previous year's poverty line adjusted for the change in the Consumer Price Index (CPI).