power
வலிமை, வல்லமை, ஆற்றல், சக்தி, சட்டுவம், பராக்கிரமம், அடல், அதிகாரம், ஆதிபத்தியம், ஊக்கம், திண்மை, திராணி, திறமை, வீரியம், வலு
தமிழ் விளக்கம்
வலிமை என்பது ஒன்றிற்கொன்று மாறுபட்ட பல அர்த்தங்களில் பயன்படும் ஒரு சொல்லாடல். மேக்ஸ் வெபெர் (Max Weber) என்ற சமூகவியலாளரின் கூற்றுப்படி, பல்வேறு இடையூறுகளுக்கிடையே (obstacle), எதிர்ப்புக்களிடையே (resistance), விரோதத்திற்கிடையே (opposition) மனிதர்களையும், சம்பவங்களையும், வளங்களையும் கட்டுப்படுத்தி, நினைத்த செயலை செய்துமுடிக்கும் திறன் வலிமை என்றறியப்படுகிறது. வலிமை என்பது ஒரு பொருளாக வைத்திருக்கத்தக்க, விரும்பப்படுகின்ற, பிறரிடமிருந்து எடுத்துக்கொள்ளத்தக்க, திருடத்தக்க, தொலைந்து போகத்தக்க, பிறரிடம் மோதும் போதோ அல்லது முரண்படும்போதோ அவர்களுக்கு எதிராக உபயோகிக்கத்தக்க ஆயுதம் என்று பல அர்த்தங்களில் விளக்கப்படுகிறது. காரல் மார்க்ஸ் கூற்றுப்படி வலிமை என்பது தனிமனிதர்களின் உறவுகள் சார்ந்ததல்ல என்றும், மாறாக அது அவர்கள் சார்ந்த வர்க்கங்களின் உறவுகள் சார்ந்தது. வலிமை என்பது, உற்பத்திக்கான உடமைகளை வைத்திருப்பதிலிருந்து வருவதாகக் காரல் மார்க்ஸ் குறிப்பிட்டார். டால்காட் பார்சன் என்ற சமூகவியலாளர் ஆற்றல் என்பது சமூக நிர்பந்தங்களுடனோ அல்லது ஆதிக்கம் செலுத்துவதனுடனோ சம்பந்தப்பட்டதல்ல என்றும், மாறாகச் சமூகம் மற்றும் மனிதர்களுடைய செயல்பாடுகளையும் வளங்களையும் ஒருங்கிணைத்துக் குறிக்கோளை அடைய உதவும் உள்ளார்ந்த ஆற்றலைக் குறிக்கும் என்கிறார்.
English
The possession of resources that enables an individual to do something independently or to exercise influence and control over others.