power-and-control phase

அதிகாரம் மற்றும் கட்டுப்படுத்தல் நிலை

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணியில் குழுவின் வளர்ச்சிக் கட்டங்களைப் பல்வேறு ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இந்த வகைப்பாடுகள் குழு அடைய நினைக்கும் குறிக்கோள்களை (1.தோழமைக்கான குழுக் குறிக்கோள் (Social Goals Model) 2. பரிகார நோக்கங் கொண்ட (சிகிச்சை) குழுக் குறிக்கோள்கள் (Remedial Model) 3. பரஸ்பர உதவி (சக உதவி) (Reciprocal Model) குழுக் குறிக்கோள்) மையப்படுத்தி உருவானவையாகும் அந்த நிலைகள் ஒன்றிற்கு ஒன்று முரணானவை அல்ல, ஆனால் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டதாகும். குழு வளர்ச்சிக் கட்ட வகைப்பாட்டை டக்மன் (Tuckman) உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் செய்துள்ளனர். டக்மன், குழு வளர்ச்சியில் ஐந்து நிலைகளைக் (1. Forming Stage குழு உருவாகும் காலகட்டம். (அறிமுகக்கட்டம்) 2. Storming Stage குழு உறுப்பினர்களிடையே ஏற்படும் குழப்பக் கட்டம். 3. Norming Stage விதிகள், நடைமுறைகள் உருவாகும் காலகட்டம் 4. Performing Stage குழு செயல்பாட்டுக் காலகட்டம் 5. Adjourning Stage குழு முடிவுறும் கட்டம்) கூறியுள்ளார். வித்தகர் (Whittaker) நான்கு நிலைகளை (1.Preaffiliation 2.Power and Control 3. Intimacy 4. Differentiation) வகைப்படுத்தியுள்ளார். Power and Control Phase என்பது ஆரம்ப கட்டத் தயக்கங்களைக் (preaffiliation) கடந்து, குழு உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புக்களை, தலைவர்களாக, பின்பற்றுபவர்களாக, உரையாடல்களை ஊக்குவிப்பவர்களாக, அமைதியாக பங்கேற்பவர்களாக, தங்கள் ஆற்றலையும் மற்றவர்கள் மீதான செல்வாக்கைச் செலுத்த ஆரம்பிப்பர். இந்த ஆற்றலும் செல்வாக்கும் உறுப்பினர்களிடையே அன்யோன்யத்தை (intimacy) உருவாக்கி, ஒவ்வொரு உறுப்பினரும் அவருக்கான பங்கை (diferentiation) குழு வளர்ச்சிக்குச் செய்ய ஆரம்பிப்பர்.

English

The second stage in group development in which group members tend to lose their guardedness and ambivalence and begin to establish their respective roles in the group, as leaders, followers, talkers, passive members, and so forth. In this conception about the various stages through which groups progress, this phase follows the preaffiliation phase and is followed by the intimacy phase, the differentiation phase, and the separation phase.