practice wisdom
அனுபவ ஞானம், நடைமுறை ஞானம், செயல்முறை ஞானம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளர்கள் தங்களுடைய பணியை நடைமுறையில் பயனுள்ளதாகச் செய்துமுடிக்க, தங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்ட விசயங்களை, உருவாக்கிக் கொள்ளும் அனுமானங்களை, எது நடைமுறையில் பலனளிக்கும் என்பதையறிந்து எடுக்கும் முடிவுகளை அனுபவ ஞானம் எனலாம். அனுபவ ஞானம் என்பது நடைமுறையில் பயனுள்ள இயல்பறிவோடு ஒப்பிடப்பட்டாலும், பல நேரங்களில் அதை ஆய்வுக்குட்படுத்தும் போது அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளோடு பொருந்தாதவையாகக் கூட இருக்க வாய்ப்புண்டு.
English
A term often used by social workers to describe the accumulation of information, assumptions, ideologies, and judgments that have seemed practically useful in fulfilling the expectations of the job. Practice wisdom is often equated with "common sense" and may or may not be validated when subjected to empirical or systematic analysis and may or may not be consistent with prevailing theory.