practicum

செயல்முறைப் பயிற்சி

தமிழ் விளக்கம்

சில பாடமுறைகளில் பள்ளியிலோ, கல்லூரியிலோ வகுப்பறையில் கற்றுக்கொண்ட கோட்பாடுகள், திறன்கள் போன்றவற்றை நடைமுறையில் செய்து பார்ப்பது. கல்வியியல், மருத்துவம், செவிலியர் பயிற்சி, சமூகப்பணிக் கல்வி போன்றவற்றில் செயல்முறைப் பயிற்சி, வகுப்பறைக் கல்வியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சமூகப்பணியில் களப்பணிப் பயிற்சி என்பது செய்முறைப் பயிற்சியாகும். இந்தச் செயல்முறைப் பயிற்சியில் வாடிக்கையாளர்களின் பல்வேறு பிரச்சனைகளைக் கையாள மேற்பார்வையாளரின் வழிகாட்டுதலில் மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.

English

Part of the professional education of students in which they apply the knowledge and skills acquired primarily through classroom assignments to direct practice with clients. In social work education, this occurs primarily in field placement assignments in which students work, under close professional supervision, with clients in social agencies or other social services settings.