Pray, Kenneth (1882-1948)

பிரே, கென்னத் (1882-1948)

தமிழ் விளக்கம்

பிரே, கென்னத் (1882-1948) - சமூகப்பணிக் கல்வியாளர் மற்றும் ஆய்வாளர். சமூகப்பணியில் சமுதாய அமைப்புப் பாடமுறையை மேம்படுத்தியவர். சமூகப் பணிக்கல்விக்கான குழுவிற்காக (சமூகப் பணிக்கல்விக்கான குழு என்பது, சமூகப்பணிக் கல்வியின் தர அளவுகளை நிர்ணயிக்கவும், அதை நிலைநிறுத்தவும் சமூகப்பணிக் கல்வியாளர்கள், சமூகப்பணி தொழில்சார்ந்த அமைப்புகள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சமூகப்பணி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் அடங்கிய ஒரு சுதந்திர அமைப்பு) சமூகப்பணி கல்வி பற்றிய விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் குழுவிற்குத் தலைவாராக இருந்து செயல்பட்டவர். பொது அறக்கட்டளைகள் சங்கத்துடனும், சிறைச்சாலைச் சீர்திருத்ததிலும் அக்கறை கொண்டு செயல்பட்டவர். பென்சில்வேனியா பல்கலைக்கழக சமூகப்பணித் துறையின் சமூகத் திட்டமிடல் மற்றும் நிர்வாகத் துறையின் தலைவாராகவும் பணியாற்றினார்.

English

Social work scholar who developed community organization as a social work method. Pray led the first comprehensive survey of social work education done by the Council on Social Work Education (CSWE).