preaffiliation phase

குழுவாக இணைவதற்கு முந்தைய நிலை

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணியில் குழுவின் வளர்ச்சிக் கட்டங்களை பல்வேறு ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இந்த வகைப்பாடுகள் குழு அடைய நினைக்கும் குறிக்கோள்களை (1. தோழமைக்கான குழுக் குறிக்கோள் (Social Goals Model) 2. பரிகார நோக்கங் கொண்ட (சிகிச்சை) குழுக் குறிக்கோள்கள் (Remedial Model) 3. பரஸ்பர உதவி (சக உதவி) (Reciprocal Model) குழுக் குறிக்கோள்) மையப்படுத்தி உருவானவையாகும் அந்த வளர்ச்சிக் கட்டங்கள் ஒன்றிற்கு ஒன்று முரணானவை அல்ல ஆனால் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டதாகும். குழு வளர்ச்சிக் கட்ட வகைப்பாட்டை டக்மன் (Tuckman) உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் செய்துள்ளனர். டக்மன் குழு வளர்ச்சியில் ஐந்து நிலைகளைக் (1. Forming stage குழு உருவாகும் காலகட்டம். (அறிமுகக்கட்டம்) 2. Storming Stage குழு உறுப்பினர்களிடையே ஏற்படும் குழப்பக் கட்டம். 3. Norming Stage விதிகள், நடைமுறைகள் உருவாகும் காலகட்டம் 4. performing stage குழு செயல்பாட்டுக் காலகட்டம் 5. Adjourning Stage குழு முடிவுறும் கட்டம்) கூறியுள்ளார். வித்தகர் (Whittaker) நான்கு நிலைகளை (1.Preaffiliation 2.Power and Control 3. Intimacy 4. Differentiation). நிலைகளைக் கூறியுள்ளார். Pre affiliation Phase என்பது குழு உணர்வு உருவாவதற்கு முந்தைய ஆரம்ப கட்டம். குழு உறுப்பினர்களிடையே தயக்கமும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதனடிப்படையில் தன்னுடைய அணுகுமுறையை தீர்மானிக்க திட்டமிடும் காலகட்டம்

English

The first stage in group development in which group members tend to be ambivalent about belonging, fearful, guarded, distant, and reluctant to engage in self-disclosure and risk taking. In this conception about the various phases through which groups progress, the subsequent stages have been described as the power-and-control phase, intimacy phase, differentiation phase, and separation phase.