preconscious

நனவுக்கு முந்தைய நிலை, நனவுக்கு முன்படு, உணர்வடியுளம், உள்ளுறை நனவு, முன்னுணர்ச்சி

தமிழ் விளக்கம்

உளவியல் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் கூற்றுப்படி, மனித மனம் மூன்று பகுதிகளைக் கொண்டது. நினைவு மனம், நினைவுக்கு முந்தைய உள்ளுறை மனம், ஆழ்மனம். நினைவுக்கு முந்தைய உள்ளுறை மனச் சங்கதிகள், எப்போதும் நினைவில் இல்லாவிட்டாலும், அதில் உள்ளுறைந்த நினைவுகளை தேவையானபொது மீட்டெடுக்க முடியும். இந்த ஆழ்மனம் அடக்கப்பட்ட எண்ணஙகாளாலும், குழந்தைப் பருவ நினைவுகளாலும் நிறைந்தவை. பெரும்பாலான மனப்பிறழ்வுகளுக்கு ஆழ்மன எண்ணங்களே காரணமென்பதால், ஆழ்மனத்தை உணர்வு நிலைக்கு கொண்டுவந்து அந்த நினைவுகளின் ஆழுத்ததைக் குறைக்க உளப்பகுப்பாய்வாளர்கள் முயல்கின்றனர்.

English

Thoughts, images, and perceptions that are not in one's immediate awareness but that can be recalled with relative ease.