predelinquency
இளங்குற்றவாளியாவதற்கு முந்தைய நிலை
தமிழ் விளக்கம்
இளைஞர்கள் குற்றமிழைக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்படியான நடத்தைகளையும் சூழ்நிலைகளையும் குறிக்கும் சொல். பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமலிருப்பது, வகுப்பறையில் அமைதியைச் சீர்குலைப்பது, சண்டையிடுவது, சகாக்களிடம் கடன்வாங்குவது, பெரிய குற்றவாளிகளிடத்தில் சகவாசம் கொள்வது, பெற்றோர்களுக்கு அடங்க மறுப்பது போன்ற நடத்தைகள் இளங்குற்றவாளியாவதற்குரிய முன்னறிகுறிகளாகும். குற்றங்கள் நடக்கும் சமூகச் சூழ்நிலையில் வாழ்வது, மேற்பார்வையிடவும், புத்திமதி சொல்லி வழிகாட்டவும் பெரியவர்கள் இல்லாதிருப்பது, சமூக விரோதிகளை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பாராட்டுவது போன்றவையும் குற்றமிழைக்கத் தூண்டும்.
English
A pattern of behaviors and social circumstances that, when found in some youths, significantly increases their chances of juvenile delinquency. Such behaviors include attending school erratically, disrupting class, fighting, "borrowing" things from peers, associating with older delinquents, and being unmanageable by parents. Circumstances include living in a crime-plagued neighborhood, having little or no supervision or guidance, and having role models who glamorize antisocial behavior.