preferred provider organizations (PPOs)

முன்னுரிமை பெற்ற சேவை வழங்கு நிறுவனங்கள்

தமிழ் விளக்கம்

மருத்துவர்கள் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டவர்களைக் கொண்ட கூட்டமைப்பு. இந்த மாதிரியான அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்குழு நிலையான வருடாந்திரக் கட்டணத்தை சந்தாவாகப் பெற்றுக்கொண்டு, உறுப்பினர்களுக்கு விரிவான ஆரோக்கியப் பாதுகாப்பு சேவைகளை வழங்கும். அமெரிக்க நாட்டின் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்புச் சட்டத்தின் படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம், மைய அரசு அங்கீகரித்த ஏதாவதொரு ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பைத் தேர்வு செய்து, அந்த அமைப்பு பிரேரபிக்கும் கட்டணத்தைச் செலுத்தும்போது, அவர்களிடம் அனுப்பப்படும் நோயாளிகளுக்கு சில வரையறைகளுக்குட்பட்டு சிகிச்சை அளிப்பார்கள். இது மருத்துவக் காப்பீட்டு திட்டங்களிலிருந்து வேறுபட்டது.

English

Affiliations of professionals, often in private practice, who fulfill contracts to receive third-party payments. PPO members agree to provide professional services to members of a designated group at a favorable fee-for- service rate, and the third party agrees to channel members of its group to the PPO. See also independent practice associations (IPAs) and managed health care program.