pregenital
குறியின்பப் பருவத்திற்கு முந்தைய நிலை, குழந்தையின் பாற்பண்பு அறிய இயலா ஆரம்பநிலை, குறியின்ப முன் கட்டம்
தமிழ் விளக்கம்
உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி, வாய்ப்பருவம் மற்றும் குதப்பருவத்தைய ஆளுமை நிலை மற்றும் இந்த ஆளுமைப்பண்புகள் வயதான பின்னும் நிலைபெற்றிருக்கும் நிலையை pregenital என்று குறிக்கின்றனர். சிக்மண்ட் பிராய்ட் மனித ஆளுமை வளர்ச்சி உள-பாலியல் சார்ந்து ஐந்து நிலைகளில் ஏற்படுவதாகக் கூறினார். 1. வாய்வழி நிலை (வாய்வழி) சுவைத்தல் நிலை - Oral Stage - பிறப்பு முதல் 18 மாதங்கள்), 2. குத நிலை (கழிவின்பம் காணும் நிலை - Anal Stage - 18 மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள்). 3. குறியின்பப் பருவ நிலை (பால் உணர்வு நிலை -Phallic Stage - மூன்று வயது முதல் ஆறு வயது வரை). 4. செயலற்ற நிலை (உள்ளடங்கிய பால் உணர்வு நிலை - Latency Stage 6 வயது முதல் பருவமடைதல் வரை). 5. பிறப்புறுப்பு நிலை (genital stage - பருவமடைந்தது முதல் இறுதி வரை) பிறப்புறுப்பு ஆளுமை நிலை என்பது உளம் சார் பாலியல் வளர்ச்சியின் இறுதி நிலையாகும். ஆண் பெண் பருவமடைதலில் ஆரம்பிக்கும் இந்த நிலை மனிதரின் வாழ்நாள் முழுக்க நீண்டிருக்கும். எடுத்துக்காட்டாக குதப்பருவத்தில் சிறுநீர்ப்பை மற்றும் குடலியக்கங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்பருவத்தில் குழந்தைகளுக்குக் கழிப்பறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சியினால் கச்சிதத் தன்மை, கஞ்சத்தனம், சுய ஒழுக்கம், சண்டித்தனம், பகட்டுத்தனம் போன்ற ஆளுமைப் பண்புகள் வளர, அதுவே வயது வந்தபின்னும் நீடிக்கின்றது
English
In psychoanalytic theory, the oral phase and anal phase of personality development and the manifestations of those stages that recur in later life.