pregnancy

கர்ப்பம்

தமிழ் விளக்கம்

மனித இனத்தில் ஒரு பெண் கருவுற்று, கர்ப்பப் பையில் சிசுவளர்ந்து பிரசவிக்கும் காலம் வரையிலான இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தரிப்புக் காலம் என்கிறோம். பெண்களின் கர்ப்பப் பையில் வளரும் சிசுக்கள் முழுவளர்ச்சி பெற்று வெளிவர 280 நாட்கள் தேவை. ஒரு பெண் கருத்தரிப்பதை ஊர்ஜிதம் செய்ய மருத்துவர்கள் மூன்று வழிகளைக் கையாள்கிறார்கள் 1. எதிர்பார்க்கபட்ட மாதவிடாய் நின்று குமட்டல், வாந்தி, சோர்வு, மிகை தூக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், முலைக்காம்புகளைச் சுற்றி தோன்றும் நிறமாற்றம், கருப்பைவாய் மென்மையாதல் 2. சிறுநீர் பரிசோதனையில் கருமுட்டை உற்பத்தியை தூண்டும் கோர்னியோக் கொனோட்றோபின் (Human chorionic gonadotropin (HCG) இயக்குநீர் இருப்பதும், வயிறு வீக்கம் மற்றும் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்களும் 3. கர்ப்பப்பையில் வளரும் கருவின் துடிப்பு, கருவின் இயக்கம், கதிரியக்கப் படத்தில் தெரியும் கருவின் எலும்புக்கூடு. கருத்தரித்தவுடன் அதை ஊர்ஜிதம் செய்வது கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தைப் பேண உதவும்.

English

The reproductive state of carrying a fetus within the body; that is, the time between conception and birth. Human pregnancy normally lasts about 280 days, during which time rapid changes in the development of the fetus occur in the mother's uterus. Determining the existence of pregnancy may be based on observation of certain symptoms. Physicians use three categories of pregnancy criteria: (1) presumptive symptoms include failure to experience the anticipated menstrual period, nausea or vomiting ("morning sickness"), fatigue and need for excessive sleep, frequent urination, alteration of skin pigmentation around the nipples, and softening of the cervix; (2) probable symptoms include positive results of laboratory tests for pregnancy (urine sampling for the presence of a specific level of the hormone chorionic gonadotropin), abdominal enlargement, and uterine changes; (3) positive signs include fetal heartbeat, fetal movements within the uterus, and the presence of a fetal skeleton as shown by X-ray. It is important to determine the existence of pregnancy fairly soon after conception and to determine the relative health of the fetus. See also amniocentesis and chorionic villus sampling (CVS).