prejudice
சார்பெண்ணம், தப்பெண்ணம் (தவறான அபிப்பிராயம்), முற்கோள், காட்புணர்வு; முற்சாய்வு, பாரபட்சம், தப்பெண்ணம் உண்டுபண்ணு, முன்கூட்டி மனங்கெடு, பொல்லாங்குப்படுத்து, எதிர்ச்சார்பாக்கு
தமிழ் விளக்கம்
தனி மனிதர்கள், குழுக்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரமும் இல்லாமல் கருத்துக்களைச் சொல்வது. பிறருக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ உருவாகும் இம்மாதிரியான சார்பெண்ணங்கள் சிறிது சிறிதாக நிறுவனமயப்படுத்தப்பட்டு, சமூகப் பழக்கங்களாகவும் சட்டங்களாகவும் வடிவெடுக்கின்றது. இந்தச் சார்பெண்ணங்கள் பெண்களுக்கு, முதியவர்களுக்கு, மதத்திற்கு, மொழிக்கு, இனத்திற்கு எதிராகவோ அனுசரணையாகவோ பலவகைகளில் வெளிப்படும்.
English
An opinion about an individual, group, or phenomenon that is developed without proof or systematic evidence. This prejudgment may be favorable but is more often unfavorable and may become institutionalized in the form of a society's laws or customs. See also bias, discrimination, separatism, individual racism, and institutional racism.