preliminary examination
பூர்வாங்க விசாரணை, முதற்கட்டத் தேர்வு, முதனிலை விசாரணை, புகுமுகத்தேர்வு
தமிழ் விளக்கம்
மனிதர்களைப் பற்றியோ சம்பவங்களைப் பற்றியோ முடிவெடுப்பதற்கு முன்னாள் அது தொடர்புடைய தகவல்களைச் சேகரிப்பது பூர்வாங்க விசாரணை எனப்படும். அவசர சிகிச்சை தேவைப்படுகிற மருத்துவ நிலையில், ஒரு பிரச்சனையில் தலையிட தேவைப்படும் நிலையில், ஒருவர் மீது வழக்குத் தொடுப்பதற்கு முன்னர் போதுமான ஆதாரங்களைத் திரட்டும் நிலையில் அல்லது ஒருவர் அடுத்த நிலைக்குச் செல்லத் தயாராக இருக்கின்றாரா என்பதை அறியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பூர்வாங்க விசாரணை அல்லது முதற்கட்டத் தேர்வு தேவைப்படும். ஒரு வாடிக்கையாளரை ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் சமூகப்பணியாளர்கள் இது மாதிரியான முதனிலை விசாரணையை மேற்கொள்வர். வாடிக்கையாளருக்குத் தற்கொலை எண்ணங்கள் இருந்ததா?, வாடிக்கையாளர் தன்னுடைய பிரச்சனைகளுக்காக மருத்துவச் சிகிச்சை பெற்றாரா?, மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டாரா?, அவருடைய உடல்நலம் பேணவும், பாதுகாப்பிற்கும், என்னென்ன அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த முதற்கட்ட விசாரணையை சமூகப்பணியாளர் மேற்கொள்வர்.
English
An evaluation of an individual or situation made in advance of acquiring all the relevant information that eventually will become available. Such examinations are made to evaluate emergency medical situations, to begin some intervention processes, to determine if sufficient evidence exists to hold a person for trial, or to determine if an individual seems ready to proceed to the next stage of evaluation. The slang term for this is "prelim." Social workers make preliminary examinations primarily during intake and initial client contacts. The social worker always tries to determine at least four facts in the prelim: (1) Is the client suicidal? (2) Should the client also seek medical care? (3) Does the client constitute a danger to others? and (4) Does the client need any emergency social services to maintain health, safety, and security?