premature ejaculation

விரைவுக்கலிதம், விந்து ஸ்கலிதம், நிசேகம், புணர்ச்சிப் பரவச நிலைக்கு முன்னரே விந்து வெளியேறல், விரைவாக விந்து வெளியேறல், விந்து முந்துதல்

தமிழ் விளக்கம்

தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில் விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாகத் தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறி விடுகின்றது. உடலுறவில் பெண்ணுறுப்புக்குள் நுழைந்த உடனே ஆணுறுப்பு தன் கட்டுப்பாட்டை இழந்து போவதால் உடன் விந்து வெளியேறல் ஏற்படும். சிலருக்கு ஆணுறுப்பை நுழைப்பதற்கு முன்பு கூட விந்து வெளியேறிவிடுவதுண்டு. அந்நேரத்தில் முழுமையான விறைப்புத்தன்மை இருக்க வேண்டுமென்பதில்லை. மேலும் சிலருக்கு பெண்ணை முத்தமிடும் போதோ, அவளுடன் நெருக்கமாக இருக்கும் போதோ, தொலைபேசியிலோ, நேரிலோ பேசிக்கொண்டிருக்கும்போதே கூட விந்து கசிவு ஏற்படுவதுண்டு. ஆணுறுப்பு நுழைந்த இரண்டு நிமிடங்களுக்குள் விந்து வெளியேறல் உண்டாகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆண்களில் மூன்றில் ஒரு சிலருக்கு இரண்டு நிமிடத்திலும், நிறைய நபர்களுக்கு ஒரு நிமிடத்துக்குள் ஸ்கலிதம் உண்டாகிறது. வேறு சிலருக்கோ இருபது வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை. ஏறக்குறைய 10 மில்லியன் ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறல் நிலை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன. மேலும் எல்லா ஆண்களுமே தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் இதை அனுபவித்திருப்பார்கள். இன்றைய நாட்களில் விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையானது ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் பெரியதொன்றாகும். இது இல்லற தாம்பத்திய வாழ்வில் சொல்லனாப் பிரச்சனைகளை உருவாக்கவல்லது.

English

A sexual disorder in which the man recurrently reaches orgasm before he wishes to, resulting in unsatisfactory coitus.