premature termination

வாடிக்கையாளரை நிர்க்கதியாய் விட்டுவிடுவது

தமிழ் விளக்கம்

தொடர்ந்து உதவியோ, வழிகாட்டலோ வாடிக்கையாளருக்குத் தேவைப்படுமென்று தெரிந்திருந்தும், வாடிக்கையாளரின் பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லையென்று தெரிந்திருந்தும், வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலையாலோ, குறிப்பிட்ட நிலைக்குமேல் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கான சேவைக்கட்டணத்தைப் பெறமுடியாதென்று தெரியவரும் நிலையில், தங்களுடைய சேவையை நிறுத்திக்கொள்ளும் சமூகப்பணியாளர் மற்றும் பிற திறத்தொழிலினரின் நெறியற்ற தொழில் அணுகுமுறையைக் குறிக்கும் சொல். இவர்கள் தங்களுடைய சேவையை நிறுத்திக் கொள்வதை மிக நாசூக்காக மூன்று வழிகளில் வெளிப்படுத்துவர். 1. வாடிக்கையாளர் எதற்காகத் தங்களிடம் வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதென்று சொல்லி சேவையை நிறுத்திக்கொள்வது. 2. தன்னைவிட இன்னார் மிகச் சரியான சேவையை வழங்க முடியுமென்று கூறி, பிறரிடம் கைகாட்டிவிட்டு சேவையை நிறுத்திக்கொள்வது 3. நியாமற்ற பரிந்துரைகளை வழங்கி அதன்படி வாடிக்கையாளரால் நடக்கமுடியாத பட்சத்தில், தாங்கள் செய்த பரிந்துரைகளின்படி வாடிக்கையாளர் நடந்துகொள்ளவில்லை என்று சொல்லி சேவையை நிறுத்திக்கொள்வது.

English

Discontinuing services to clients who are still in need. This is considered unethical, and many malpractice suits have been made over this action. See also "client dumping."