premenstrual syndrome (PMS)
மாத விடாய்க்கு முந்தைய அறிகுறிகள்
தமிழ் விளக்கம்
மாதவிடாயின் போது ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்கள் முன்பிருந்தே ஏற்படும் அடிவயிற்று வலி, உடம்பு கனமாகத் தோன்றுதல், வயிற்றுப் பொருமல், மார்பகம் தடித்தல், உடல் வலி, தலைவலி, உடல் அசதி, எதெற்கெடுத்தாலும் கோபப்படும் தன்மை போன்ற எல்லா மாற்றங்களுக்கும் ஹார்மோன்களே மூலகாரணங்களாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டீரான் என்கிற ஹார்மோன்களின் மாறுபட்ட அளவுகளே இத்தகைய மாற்றங்களுக்குக் காரணம். மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும். இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும். திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம். மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாகச் சுருங்கி விரிவதால்தான் இருக்கும். மாதவிடாயின் போது கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையை நாடலாம். ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தாலோ, கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்ந்தாலோ அது எண்டோமிட்ரியோஸிஸ் எனப்படும் தொந்தரவுக்கு ஆளாக்கி, எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்குச் சிகிச்சைகள் அவசியம்.
English
Feelings of discomfort and related personality fluctuations that affect some women during the several days of their menstrual cycles immediately before menstruation. Some medical researchers indicate that hormone secretions peak during these days and hypothesize that this may influence the feelings and behaviors of some, but not all, women.