prenatal

பிரசவத்திற்கு முந்தைய காலம்

தமிழ் விளக்கம்

கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டு பிரசவம் நிகழ்கின்ற வரைக்குமான காலம். கர்ப்பமடைந்த தாய்மார்கள், இக்கால கட்டத்தில் தங்களையும், தங்கள் வயிற்றில் வளரும் சிசுவையும் முறையான மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும். கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் கருவின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் மற்றும் அனைத்து உறுப்புகளையும் உருவாகின்றன. எனவேதான், இந்த காலகட்டத்தில் மகப்பேறு மருத்துவரின் அனுமதியின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது. சில மருந்துகள் கருவை ஊனமாகவோ, கலைக்கவோ செய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும் முதல் 3 மாதங்களில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியவை நம்மை அணுகாமல் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.

English

Before birth.