presbyopia

மூப்புப்பார்வை, வெள்ளெழுத்து (presbyopia), சாளேசுவரம்

தமிழ் விளக்கம்

மூப்புப்பார்வை என்பது விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயதுடன் குறைபட்டுச் செல்லுகின்ற ஒரு உடல் நலக்குறைபாடாகும் இந்தக் குறைபாட்டிற்கான சரியான விளக்கம் திட்டவட்டமாகத் தெரியாவிடினும், ஆய்வுகளில் இருந்து கண்ணின் வில்லை மீட்சித்தன்மையை இழப்பது, வில்லையின் வடிவத்தை மாற்றி அமைக்கும் பிசிர்த்தசை வலுவிழப்பது, வில்லை பெரிதாகிக் கடினமாவது போன்ற விழி ஏற்பமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுவதால் உண்டாவதாக அறியப்பட்டுள்ளது. வெள்ளை முடியும் சுருக்கங்களும் முதுமை அடைவதைக் காட்டுவதைப் போலவே, மூப்புப்பார்வையும் (பிரஸ்பையோப்பியா) முதுமை நிலைக்கான தொடக்க நிலையை நினைவு படுத்தும் ஓர் இயற்கையான குறைபாடாகும். நாற்பதிற்கும் ஐம்பதிற்கும் இடைப்பட்ட வயதுக் காலத்தில் இக்குறைபாட்டின் முதல் அறிகுறி தென்படுகிறது. கண் குவியமின்மை இழத்தலால் வயது கூடக்கூட அண்மையில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பது கடினமாகிக்கொண்டே போகும். மூப்புப்பார்வை (பிரஸ்பையோப்பியா) எட்டப்பார்வை அல்லது தூரத்துப் பார்வை என்று அழைக்கப்படும் ஐப்பெர்மெட்ரோப்பியாவுடன் தவறுதலாக ஒப்பிடப்படலாம், இவை இரண்டும் வெவ்வேறு குறைபாடுகள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பிரஸ்பையோப்பியாவில் குறைபாடானது வில்லையில் காணப்படுகையில் ஐப்பெர்மெட்ரோப்பியாவில் விழிக்கோளத்தில் ஏற்படும் ஒளிமுறிவுப் பிழை ஆகும். பிரஸ்பையோப்பியா என்ற சொல்லானது, “முதியவர்” என்னும் கருத்துத் தரும் கிரேக்கச் சொல்லான presbys உடன் புதிய இலத்தின் விகுதியான opia என்னும் “பார்வைத் தன்மை” சேர்ந்து உருவாகியது. தமிழில் முதிய வயதுக்கான பார்வை என்று பொருள் கொள்ளலாம்.

English

Age-related condition of the eyes in which the lens becomes less able to focus on close objects. Presbyopia exists in varying degrees in nearly everyone older than 40.