prescribing the symptom

நோய்க்குறிகளையே நிவாரணமாகப் பரிந்துரைப்பது

தமிழ் விளக்கம்

குடும்பச் சிகிச்சை முறையில், அக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவரிடமோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்களிடமோ பிரச்சனை என்று கருதப்பட்ட ஒரு நடத்தையை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தொடர்ந்து பின்பற்றுமாறு சமூகப்பணியாளர்களாலும், பிற சிகிச்சையாளர்களாலும் செய்யப்படும் முரண்பாடான பரிந்துரை. எடுத்துக்காட்டாக குடும்பத்தில் உள்ள சிலரிடம், ஒவ்வொரு வாரத்தில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு வெறுப்புடன், உதட்டைப் பிதுக்கி மூஞ்சியைத் தூக்கிக் கொள்ளுமாறு நடந்துகொள்ள பரிந்துரைப்பர். உதட்டைப் பிதக்குதல் தான் அவ்வுறுப்பினரிடம் மற்றவருக்கு பிடிக்கவில்லை என்பது தெரிந்திருந்தும் அப்படிச் செய்யச் சொல்வதற்கான காரணம், அந்த நடத்தையை தன்னுணர்வுடன் செய்யக் கற்றுத்தந்து, வெறுக்கவைக்கும் செயலை கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரக் கொடுக்கப்படும் பயிற்சி.

English

A technique, used by social workers and other professionals engaged in family therapy, in which the therapist uses paradoxical directive to tell one or more members of a family to continue their symptomatic behavior under specified circumstances. For example, the therapist might tell certain family members to pout every Tuesday. This helps them realize the existence of the symptom and that it is under their voluntary control.