prescription, medical
மருத்துவரின் பரிந்துரை
தமிழ் விளக்கம்
மருந்தாளுனருக்கோ அல்லது நோயாளிக்கோ, நோயாளி என்ன மருந்து, எந்த அளவில் எவ்வளவு காலம் உட்கொள்ளவேண்டும், பின்பற்றவேண்டிய வேறு முறைகள் அல்லது கவனத்தில் கொள்ளவேண்டிய விசயங்களைப் பற்றி எழுத்துபூர்வமாக அளிக்கும் பரிந்துரை அல்லது உத்தரவு. மருத்துவர்கள் தங்களின் பரிந்துரைகளில் சில சுருக்கக் குறியீடுகளைப் பயன்படுத்துவார். அவையாவன. ad.lib (தேவைப்படும்போது), a.c. (உணவுக்கு முன்), b.i.d. (இரண்டு வேளை), dieb.alt. (ஒருநாள் விட்டு ஒருநாள்), o.d. (தினமும்), p.c. (உணவுக்குப் பின்), q.h. (ஒவ்வொரு மணிக்கும்), q.2h. (ஒவ்வொரு இரண்டு மணி நேரம்), q.3h (ஒவ்வொரு மூன்று மணி), t.i.d. (ஒரு நாளைக்கு மூன்று முறை), q.i.d. (ஒரு நாளைக்கு நான்கு முறை), q.s. (தேவைப்படும் அளவு), stat. (உடனே), மற்றும் p.r.n. (தேவைப்படும் போது).
English
A physician's written order to a pharmacist or patient describing the type and amount of drug or other treatment to be used, the duration of use, and other special directions. Physicians often use some of the following abbreviations in writing prescriptions: ad lib. (as needed), a.c. (before meals), b.i.d. (twice a day), dieb. alt. (every other day), o.d. (every day), p.c. (after meals), q.h. (every hour), q.2h (every two hours), q.3h (every three hours), t.i.d. (three times a day), q.i.d. (four times a day), q.s. (as much as needed), stat. (immediately), and p.r.n. (when needed).