presenting problem
பிரச்சனையை எடுத்துரைத்தல்
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளர் உதவி நாடி வரும்போது தான் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், அதன் அறிகுறிகள், அதன் விளைவுகள் மற்றும் கஷ்டங்களை எடுத்துரைக்கும் நடைமுறை. இதைப் பிரச்சனைக்கு உள்ளான வாடிக்கையாளரோ அல்லது வாடிக்கையாளருக்கு உதவ நினைக்கின்ற, அவரின் பிரச்சனையின் தன்மையைப் பற்றி அறிந்த இன்னொருவரோ செய்யலாம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் பின்னால் அதற்கான காரணங்கள் இருக்குமாதலாலும், அதைப் பலநேரங்களில் துல்லியமாகச் சரியாக வாடிக்கையாளர் சார்பில் எடுத்துச் சொல்ல முடியாததாலும், பிரச்சனையை வாடிக்கையாளர் எடுத்துரைப்பதிலிருந்து சமூகப்பணியாளர் தன்னுடைய அணுகுமுறையை, மதிப்பீடுகளை முடிவு செய்வர்.
English
The perceived symptoms, overt issues, or difficulties the client believes to constitute the problem and for which help is sought. The one who presents the problem may be the person for whom help is sought or others who recognize the need for helping that person. Because the social worker recognizes that the problem may be the result of underlying causes or that there can be inaccuracies in the way the problem is understood by the client, consideration of the presenting problem is only the beginning of the assessment phase.