pressure group
அழுத்தக் குழுக்கள், செல்வாக்குள்ளவர்களின் சேர்க்கை, (ஒன்றைச் செய்துதர) நெருக்கடி கொடுக்கும் குழுக்கள், உள்ளுந்தல் குழு
தமிழ் விளக்கம்
அரசுக் கொள்கை முடிவுகளிலோ, அரசு சட்டமியற்றுதலிலோ, அரசியல்வாதிகளிடம் சிலவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கச் சொல்லியோ, வணிக அல்லது பிற நிறுவனங்களின் நடைமுறையிலோ, பொதுமக்கள் எண்ணப்போக்கிலோ தாங்கள் விரும்பும் தாக்கத்தை அல்லது தங்களின் குறிக்கோளை அடைய முயலுபவர்களை அழுத்தக் குழுக்கள் எனலாம். அழுத்தக் குழுக்கள், ஆதரவுக் குழுக்கள், பிரச்சாரக் குழுக்கள், ஆர்வக் குழுக்கள், அல்லது சிறப்பு ஆர்வக் குழுக்கள் (பிரத்தியேக ஆர்வம்) (pressure groups, lobby groups, campaign groups, interest groups, or special interest groups) என்று பல பெயர்களில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அல்லது தனிமனிதர்களின் கூட்டமைப்பு முயற்சிகளை இச்சொல் குறிக்கும். ஊடகப் பிரச்சாரங்கள், அரசியலனைவு நாடுதல், வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்தல், மக்கள் கவனத்தைக் கவரும்படியான போராட்ட முறைகள் போன்ற செயல்பாடுகளின் மூலம் தங்கள் கருத்துக்களை எடுத்து வைப்பர். அனைவருக்கும் பயன்படும்படியான செயல்பாடுகளில் ஈடுபடும் குழுக்களை பொது ஆர்வக் குழுக்கள் (public-interest group) என்றும், சில பிரத்யேகக் குறிக்கோள்களை முன்னெடுக்கும் குழுக்களை சிறப்பு ஆர்வக் குழுக்கள் (special-interest group) என்றும் சொல்வர். ஒரு குறிப்பிட்ட நிலையைத் தக்க வைக்க (maintain the status quo) முயலும் குழுக்களை ஆர்வக் குழுக்கள் என்றும், மாற்றத்தை ஏற்படுத்த முயலும் (change the status quo). குழுக்களை அழுத்தக் குழுக்கள் என்றும் வேறுபடுத்திக் காட்டுவதுமுண்டு.
English
An organization or collective of like-minded individuals that seeks to influence the policies of governments, political candidates, agencies, or the general public. Such groups present their views through the use of a media event, legislative advocacy tactics, lobbyists, political action committees (PACs), fundraising, and voter campaigns. Two types of pressure groups are the public-interest group and the special-interest group. See also interest group.