pretest
முன் சோதனை
தமிழ் விளக்கம்
ஒரு பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்னோ, உடற்பயிற்சி நடைமுறைக்குப் முன்னோ அல்லது உளவியல் சிகிச்சைக்கு முன்னோ, ஒருவரின் நிலையறிய / கருத்தறியத் தரப்படும் கேள்வித்தாள். எல்லாச் சோதனை முறைகளிலும், நிகழ்வு தொடங்கும் போது முன்சோதனை நடத்தப்பட்டு, நிகழ்வு முடிந்த பின், பின் சோதனை செய்யப்பட்டு, இரண்டு சோதனைகளும் ஒப்பீடு செய்யப்படும். முன் சோதனை என்பது வெள்ளோட்ட ஆய்விலிருந்து (pilot study) மாறுபட்டது.
பார்க்க; pilot study - முன்னோடி ஆய்வு - வெள்ளோட்ட ஆய்வு, முன்னோடித் திட்டம், முன் பரிசோதனை போன்ற செயல்கள், பெரிய அளவிலான செயல்களைச் செய்யும் முன்பு, அதனுடைய செயலாக்கச் (இயலுமை) சாத்தியக் கூறுகள், தேவைப்படும் காலஅவகாசம், அந்தச் செயலைச் செய்யும்போது ஏற்படும் சிரமங்கள், புள்ளியியல் ரீதியாக நிரூபிக்கத் தேவைப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை போன்றவற்றை அறிந்துகொள்ளவும், அதற்கேற்றபடி பெரிய அளவிலான முயற்சிகளை, தவறுகளைத் தவிர்த்து வடிவமைக்கவும் மேற்கொள்ளப்படுகிற நடைமுறை.

English
A questionnaire or other datagathering instrument administered to a subject just before a specific period of inquiry, such as a training program, health regime, or psychological treatment intervention. Usually the pretest results provide a baseline level for comparison with the posttest results. A pretest is not the same as a pilot study.