primal therapy

ஊக்க உளச்சிகிச்சை, பிரதான நோய்தீர்க்கும் முறை

தமிழ் விளக்கம்

குழந்தைப் பருவத்தில் ஒருவருக்கு ஏற்படும் விரும்பத்தகாத சம்பவங்களின் தேங்கிய, வலிமிக்க நினைவுகளின் விளைவாக ஏற்படுவதே எல்லாவகையான மனக்கோளாறுகளும். ஆழ்மனதில் தேங்கிவிட்ட வலிமிக்க நினைவுகளை தோண்டியெடுத்து, நினைவிற்குக் கொண்டுவந்து, அது ஆழ்மனதிலிருந்து செயல்படமுடியாதவாறு தடுப்பதே பிரதான நோய் தீர்க்கும் முறையாகக் கருதப்படுகிறது. இந்த முறையைப் பிரேரிபித்தவர் ஆர்தர் ஜனாவ் (Arthur Janov) என்ற அமெரிக்க உளப்பிணி சமூகப்பணியாளர். இந்த முறையில் ஒருவரைத் துன்புறுத்தும், குழந்தைப் பருவ வலிமிக்க நினைவுகளை உருவாக்கியதாக நினைப்பவர்கள் மீது ஏற்படும் கோபத்தை, வேறு ஒரு பொருளை அவராகப் பாவித்து (எதிரில் இருக்கும் நாற்காலி மீதோ அல்லது ஒரு தூணின் மீதோ) வெளிப்படுத்தும் போது வலிமிக்க நினைவுகள் ஆழ்மனதிலிருந்து அகற்ற செய்யப்படும் சிகிச்சை முறை.

English

A form of psychotherapy based on intense catharsis. The therapist may encourage regression in clients by focusing on early childhood experiences to the extent that the client expresses primitive (primal) emotions through such dramatic means as loud, prolonged screaming.