primary alcoholism
முதன்மை மதுப்பழக்கம்
தமிழ் விளக்கம்
மது அருந்துதலில் கவலைகளை மறக்க மது அருந்துதல் அல்லது ஒரு தூண்டலினால் மது அருந்துவது (reactive alcoholism), தொடர்ச்சியாக ஆனால் அளவறிந்து மது அருந்துவது (secondary alcoholism), மது சார்பு நிலை (primary alcoholism) என்று பலவகையுண்டு. குடிப்பழக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான உயிரியல் கோட்பாடுகள் உறுதியற்றதாக இருப்பினும் சமூகச் சூழல், மனத்தகைவு, மனநலம், மரபியல் முற்சார்பு, வயது, இனம், பாலினம் ஆகியவை வாய்ப்பு அளிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. நீண்ட கால மதுப் பழக்கத்தினால் சகிப்புத் தன்மை மற்றும் பொருண்மச்சார்பு போன்ற உடலியக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் விடாப்பிடியான மதுப்பழக்கத்தை வலுப்படுத்துவதோடு மது குடிப்பதை நிறுத்தும்பொழுது, மது நிறுத்த நோய்க் கூட்டறிகுறி ஏற்படுகிறது. மது மூளை உட்பட, நமது உடலில் இருக்கும் ஏறத்தாழ அனைத்து உறுப்புக்களையும், சேதமடைய வைக்கிறது; கடுமையான, தொடர் மது அருந்தும் பழக்கம் காரணமாக உடலில் நச்சுத்தன்மை ஏறிக்கொண்டே சென்று மது அருந்துவோர் பல விதமான மருத்துவ மற்றும் மனநலச் சீர்கேடுகளுக்கு ஆளாகிறார்கள். மதுப் பழக்கம் கொண்டவர்களுக்குச் சமுதாயத்திலும், அவர்களது குடும்ப மற்றும் நண்பர்களிடையேயும் அதீதமான பாதிப்புகள் ஏற்படும்.
English
One of the three major types of alcoholism (the other two being secondary alcoholism and reactive alcoholism) in which the individual has high tolerance for alcohol, drinks in response to physiological withdrawal symptoms, and puts drinking ahead of all other activities. This appears to be a genetically influenced disease and begins, in most people, between ages 25 and 35.