primary degenerative dementia

ஆரம்ப நிலை நினைவுச் சிதைவு

தமிழ் விளக்கம்

மறதிநோய் (Dementia என்பது 'சிதைவடையும் மனம்' de - 'without,' mens 'mind,' = 'madness,' என்ற பொருள் கொண்டதாகும்) ஒரு தீவிரமான உளவியல் குறைபாடாகும். ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இது மூளையில் ஏற்படும் காயத்தினாலோ, உளவியல் செயல்பாடுகளில் (மன அழுத்தம், மனக்கவலை) நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டாலோ, இயல்பாக முதுமையடைவதால் மூளைக்கு இரத்தம் செல்வது படிப்படியாகக் குறைவதாலோ ஏற்படலாம். முதுமை மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே.
ஆரம்பநிலை அறிகுறிகள்
1. மொழித் திறனில் தடுமாற்றம், 2. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், 3. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை, 4. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது 5. முடிவு எடுப்பதில் சிரமம், 6. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை, 7. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல், 8. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்
இடைநிலை அறிகுறிகள்:
நோய் தீவிரமடையும்போது பிரச்சினைகளும் அதிகமாகும். அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள்.1. மறதி அதிகமாகும். (குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள்) 2. துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள் 3. தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளச் சிரமப்படுவார்கள் 4. கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது 5. குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள் 6. தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள்
இறுதிநிலை அறிகுறிகள்:
இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார். மறதி மிக அதிகமாகவும், உடல்நலக் குறைவும் காணப்படும். 1. தானாக உணவு உட்கொள்வதில் சிரமம் 2. உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம் 3. குழப்பமான மனநிலையில் இருப்பார்கள் 4. தானாக நடக்க இயலாது 5. தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது 6. புரிந்துகொண்டு செயல்பட முடியாது 7. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது 8. தான் யார் என்பதே மறந்துவிடும்
முதுமை மறதி நோயின் பொதுவான காரணங்கள். அல்சைமர்ஸ் நோய், மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல், மூளைக் கட்டிகள், தலையில் ஏற்படும் விபத்துக்கள், தொற்றுக்கள், நீண்ட கால மிதமிஞ்சிய மதுப்பழக்கம், இயக்கு நீர் சுரத்தலில் ஏற்படும் குறைபாடு, நுண்சத்து (வைட்டமின்) குறைபாடுகள் போன்றவையாகும்.

English

A mental disorder in which dementia begins gradually with steady deterioration thereafter. Symptoms begin for most people in their mid-60s and are rare before age 50. Alzheimer's disease is the most common of the primary degenerative dementias.