primary group

முதல்நிலைக் குழுக்கள்

தமிழ் விளக்கம்

முதல் நிலைக் குழுக்கள் என்ற சொற்பிரயோகம் அமெரிக்கச் சமூகவியலார் சார்லஸ் கூலே (Charles Coole) என்பவரால் அவருடைய சமூக அமைப்பு என்ற புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒருவருக்கொருவர் நேரடித் தொடர்பிலுள்ள, அன்யோன்யமான, ஒருவருக்கொருவர் பரஸ்பர அக்கறை எடுத்துக்கொள்கிற, ஒத்த கருத்துக்களையும் கலாச்சார மதிப்பீடுகளையும் கொண்டிருக்கின்ற, உளவியல் ரீதியாக ஆறுதல் தரக்கூடிய, சுய அடையாளம் வெளிப்படுமாறு ஒருவர் மீது ஒருவர் செல்வாக்குச் செலுத்தக்கூடிய, இரண்டிற்கு மேற்பட்ட நபர்களை முதல்நிலைக் குழுக்கள் என்ற சொல்லால் குறிப்பர்.

English

People who are in intimate and frequent face-to-face contact with one another, have norms in common, and share mutually enduring and extensive influences.