primary prevention

முதனிலைத் தடுப்பு

தமிழ் விளக்கம்

நோய்களையோ அல்லது சமூகப் பிரச்சனைகளையோ உருவாக்குமென்று கருதப்படுகின்ற காரணிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யப்படும் செயல்பாடுகள். எடுத்துக்காட்டாக, ஒரு சமுதாயத்தில் செய்து தரப்படும் சுகாதார வசதிகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் பூங்காக்கள் அங்கு நோய்கள் பரவவிடாமல் தடுக்கும், மன அழுத்தத்தால் உண்டாகும் சீர்கேடுகளைக் குறைக்கும். சமூக நலத்திட்டங்கள் மூலமாகச் செய்து தரப்படும் சமூகக் காப்புறுதி திட்டங்களும், சமுதாய ஊழியரகங்களும் பல பிரச்சனைகளைத் தடுப்பதுடன், மக்களை சமூக இணக்கமுள்ளவர்களாக்கி, பிரச்சைகளைத் தவிர்க்கவும், வாய்ப்புகளை விரிவாக்கவும் உதவுகின்றன.

English

Actions taken to keep conditions known to result in disease or social problems from occurring. For example, a community's development of sanitation facilities, recreation centers, and parks helps prevent diseases and stress- related disorders. Social welfare efforts in primary prevention include the development of social insurance programs and settlement house activities that help socialize and educate people so they can avoid problems and enhance their opportunities. See also prevention, secondary prevention, and tertiary prevention.