primary process thinking
முதனிலைச் சிந்தனை முறை, பக்குவப்படாத சிந்தனை முறை
தமிழ் விளக்கம்
மனிதர்களில் ஆரோக்கியமானதும் ஆரோக்கியமற்றதுமான பலவகையான சிந்தனைப் பாங்கை உளப்பகுப்பாய்வாளர்கள் விளக்குகின்றனர். அவையாவன 1.மதி இறுக்க சிந்தனை (autistic thinking) 2. விமர்சனச் சிந்தனை (critical thinking) 3. சுய, தன்மகிழ்வெண்ணச் சிந்தனை (dereistic thinking) 4. மாயச் சிந்தனை (magical thinking) 5. முதன்மைச் செயல்முறைச் சிந்தனை / பக்குவப்படாத சிந்தனை (primary process thinking) 6. இரண்டாம் நிலைச் சிந்தனை / எதார்த்த சிந்தனை (secondary process thinking). முதனிலைச் சிந்தனை என்பதை உணர்வு உந்தலால் (id), இன்பமடைதலை குறிக்கோளாகக் (pleasure principal) கொண்ட, புறஉலக மதிப்பீடுகளை கவனத்தில் கொள்ளாது, ஆழ்மன இச்சைகளினால் உருவாகி, நனவு மனத்தால் சீர்தூக்கிப் பார்க்கப்படாமல் வெளிப்படும் சிந்தனை. இது மனச்சிதைவு நோய்க்கு ஆட்பட்டவர்கள் மற்றும் தூக்கத்தின் போது ஏற்படும் உளறல்களுக்கு ஒப்பானது. இதற்கு மாறான இரண்டாம் நிலைச் சிந்தனை என்பது தருக்கரீதியான, சட்டத்திற்கு உட்பட்ட, புறஉலக மதிப்பீடுகளுக்குக் கட்டுப்பட்ட இரண்டாம் நிலைச் சிந்தனை அல்லது பக்குவப்பட்ட சிந்தனை ஆகும்.
English
Disorganized and irrational thoughts expressed without reference to the individual's external world. Psychoanalytic theorists believe that such expressions represent thoughts from the deepest parts of the psyche and include unconscious thoughts that have not been screened or "processed" by the ego. Such expressions are sometimes seen in psychotic patients and in some people who speak while asleep.