private adoption

சுயாதீனத் தத்தெடுப்பு

தமிழ் விளக்கம்

தத்தெடுத்தல் என்பது இரத்த உறவு இல்லாத குழந்தை ஒன்றுக்கு பெற்றோராக (வளர்ப்புத் தந்தை அல்லது தாய்) செயற்படல் ஆகும். இவ்வாறு செய்வதால், தத்தெடுத்த நாள் முதல் குழந்தைக்கு முழுப் பொறுப்பாளி ஆவதுடன், அக்குழந்தையின் உண்மையான பெற்றோருக்கு அக்குழந்தை மேலிருக்கும் உரிமையும் இல்லாமல் செய்யப்படுகிறது. தத்தெடுத்தலைச் சட்டம் மூலம் செய்யும் போதுதான், பிற்காலத்தில் உரிமையைத் தக்கவைத்துக் கொள்ளவும், வேறு சிக்கல்களிலிருந்து விடுபடவும் வழிவகுக்கும்.
பொதுவாக, குழந்தைப் பேறு இல்லாதவர்களே குழந்தைகளைத் தத்தெடுக்கின்றனர். சில வேளைகளில், உடன்பிறந்தோர் பிள்ளைகளைத் தத்தெடுக்கும் வழக்கமும் உண்டு. ஆயினும், பணம்படைத்தோர் சிலர் வசதியற்ற குழந்தைகளைத் தத்தெடுக்கும் வழக்கம் உண்டு. சில இடங்களில், ஒரு ஊரைத் தத்தெடுத்தல், பாடசாலையைத் தத்தெடுத்தல் என்பனவும் உலக வழக்கில் உண்டு. தத்தெடுப்புகளில் பலவகையுண்டு 1. மானியத் தத்தெடுப்பு (subsidized adoption) 2. சுயாதீனத் தத்தெடுப்பு (independent adoption) 3. நிறுவனம் சாராத தத்தெடுப்பு (gray-market adoption), 4. சட்டபூர்வமற்ற தத்தெடுப்பு (black-market adoption), மற்றும் பிறநாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுத்தல் (intercountry adoption) போன்றவை முக்கியமானதாகும்.
சுயாதீனத் தத்தெடுப்பென்பது, ஒரு குழந்தையைத் தத்தெடுக்க சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை நடாமல், குழந்தையைப் பெற்ற பெற்றோரிடமோ, மருத்துவர், வழக்கறிஞர் அல்லது இடைத்தரகர் மூலமாகத் தத்தெடுத்துக் கொள்ளும் முறையாகும்.

English

Adoption that occurs outside of legally regulated agencies. Also known as independent adoption, the process is often facilitated by a physician, lawyer, or broker who, usually for a fee, places a child with the adoptive parents. See also gray-market adoption.