private case management

தனியாருக்கான சேவை நிர்வாகம்

தமிழ் விளக்கம்

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் / தேவைப்படும் பலவிதமான பிரச்சனைகளை / தேவைகளைக் (மருத்துவத் தேவைகள் மற்றும் சமூக நலத் தேவைகள்) கையாள ஒரு நிறுவனம், வேறொரு நிறுவனம் அல்லது சிறப்பு / திறத் தொழிலினர் உதவியைப் பெரும் முறை. தனியாருக்கான சேவை வழங்குபவர்கள், தொண்டு நிறுவனங்களிலோ அல்லது தொழிலகங்களிலோ சேவை செய்யலாம். அவர்களுக்கான சேவைக்கட்டணத்தை வாடிக்கையாளர்களோ, தொண்டு நிறுவனங்களோ அல்லது காப்பீடு நிறுவனங்களோ வழங்கலாம். தனியாருக்காகச் சேவை செய்பவர்கள் பெரும்பாலும் முதியோருக்கும், அவர்களைப் பராமரிக்கும் குடும்பத்தினருக்கும் பொருத்தமான சேவைகளைப் பெற்றுத்தருவதில் ஈடுபடுகின்றனர். இம்மாதிரியான சேவை வழங்குனர்கள், முதியோருக்கான மருத்துவ காப்பீடு (மருத்துவமனை சென்று சிகிச்சை பெற செலவழிக்க இயலாதவர்கள் என்று தகுதிச் சோதனைகள் மூலம் (குறைந்த வருவாய்ப் பிரிவினர்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசே மருத்துவச் சிகிச்சைக்கான செலவினங்களை தந்துதவும் திட்டம்) ஆவனங்களைத் தயாரிக்கவும், பகல்நேரப் பராமரிப்பு (day care and health care), இல்லத்தரசி சேவைகள் (homemaker services) மற்றும் வீட்டை விட்டு வெளியேற இயலாதவர்களுக்கு வீட்டைப் பராமரிப்பது (வீடுபெருக்கல் சலவை செய்தல்) போன்ற சேவைகளை வழங்க முதியவர்களின் குடும்பத்தினரால் பணியிலமர்த்தப்படுகிறார்கள். சமூகப்பணியாளர்களும் செவிலியர்களும் இம்மாதிரியான சேவைகளை வழங்குகிறார்கள்

English

The employment of autonomous organizations or professionals to help clients negotiate and use a wide range of needed health and social services. Private case managers may serve in nonprofit or for-profit organizations and work independently or for industrial organizations. Fees may be paid by the client, the employing company, or insurance companies. Private case managers are most typically engaged in helping older clients or their families obtain appropriate services from the existing array of agencies. For example, these managers might be employed by the family of a senior citizen to help with preparing Medicare documentation and obtaining homemaker and chore services, day care and health care. Nurses and social workers are the two professionals most involved in such activities.