privatization
தனியார்மயமாக்கல்
தமிழ் விளக்கம்
தனியார்மயமாக்கல் (Privatization) என்பது அரசுத் துறையின் கட்டுபாட்டிலுள்ள நிறுவனங்களின் உடைமைகள் அல்லது சேவைகளைத் தனியார் துறையிடம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மாற்றம் செய்யும் நடவடிக்கையினைக் குறிக்கும். இது உற்பத்தி மற்றும் வணிகத்துறையில் மட்டுமல்ல, சமூக நலத் துறையிலும் நடக்கின்றது. மக்களின் சமூகத் தேவைகளை அரசே முன்னின்று பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, இலாப நோக்கத்துடனோ அல்லது இலாப நோக்கமற்ற சமூக நிறுவனங்களிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கும் நடைமுறையாகும். சமூக நலத்தில் தனியார்மயம் என்பது மருத்துவம், கல்வி, குடிநீர் போன்ற மக்களின் அடிப்படையான நுகர்வுத் தேவைப் பூர்த்தியைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது. அரசு நேரடியாக நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல், தனியார் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தோ அல்லது சலுகைகளை வழங்கியோ கூட, இப்பொறுப்பை நிறைவேற்றலாம். தேசியமயமாக்கல் (nationalization, municipalization) என்பன இதற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகும். 1948 ம் ஆண்டு காலப்பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந் நடவடிக்கை 1980 இன் பின்னர் ஒரு சிறந்த பொருளாதார நடவடிக்கையாகப் பொருளியளாலர்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய வைப்பகம் (சர்வதேச நாணய நிதியம்) என்பவற்றால் பரவலாக முன்நிறுத்தப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
English
The tendency in some societies to rely on or encourage the private sector to meet the social needs of the people. In the United States, this tendency is seen in the reliance on private health, educational, and social institutions and entrepreneurs to provide services. In social work, this tendency is seen in the growth of social services provision through private for-profit corporations, partnerships, private practice, and proprietary social services.