privatized prisons
தனியார்மயமாக்கப்பட்ட சிறைச்சாலைகள், அரசு சாராத நிறுவனங்களின் கட்டுப்பாட்டில், இலாபநோக்குடன் செயல்படும் சிறைச்சாலைகள் / சீர்திருத்த நிறுவனங்கள்.
தமிழ் விளக்கம்
சிறைச் சாலைகளுக்கு அரசு செலவழிக்கும் செலவினங்களைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கையாகவும், சிறைச்சாலைகளில் வேண்டிய வசதிகளை செய்துகொடுக்கவும், சிறை நிர்வாகத்தை மேம்படுத்தவும் என்று பல குறிக்கோள்களை மையப்படுத்தி, தண்டனை பெற்ற குற்றவாளிகளைத் தனியார் சிறைகளில் அடைக்கும் நடைமுறை. நிர்ணயித்த வசதிகளையும், கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்த அரசு தனியார் சிறைச் சாலைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, கைதிகளின் எண்ணிக்கைக்கேற்ப பணஉதவி அளிக்கும். அமெரிக்காவில் தனியார் மயமாக்கப்பட்ட மாநில சிறைச்சாலைகளில் 6 சதவீதக் கைதிகளும், தனியார் மயமாக்கப்பட்ட மத்திய சிறைச்சாலைகளில் 16 சதவீத கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைச் சாலைகளைத் தனியார்மயமாக்கும் நடைமுறைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் உள்ளன.
English
Nongovernment- controlled, for-profit, correctional institutions; many jurisdictions are turning to corporations to incarcerate lawbreakers as a tax-saving program and a way to rapidly bring needed new facilities into use.