privileged communication
சலுகை பெற்ற தொடர்பாடல், சட்டவிலக்கு பெற்ற தொடர்பாடல், காப்புடமைத் தொடர்பாடல்
தமிழ் விளக்கம்
தன்னிடம் உதவிகோரி வரும் வாடிக்கையாளர் பகிர்ந்துகொண்ட தகவல்களை அவருடைய அனுமதியில்லாமல், நீதிமன்றம் நிர்பந்தித்தாலும் கூட, யாரிடமும் பகிரலாது என்ற தனிவிலக்கு பெற்ற தொடர்பாடல். அமெரிக்காவின் பல மாநிலங்களில் மட்டுமல்ல, பலநாடுகளில் கூட சட்டவிலக்கு அளிப்பதில் உறுதியற்ற நிலைப்பாடு இருந்தாலும், அமெரிக்காவிலுள்ள சில மாநிலங்கள் இந்தச் சிறப்புரிமையை, குறிப்பிட்ட தகவல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காதிருக்கும் பட்சம், பொதுமக்களுக்கு ஆபத்தில்லாத பட்சம் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை என்று அங்கீகரித்துள்ளன. சமூகப் பணியில் பின்பற்றப்படும் தொழில் நெறியான முழுமையான மறைவடக்கப் பண்பு / இரகசியமாக வைத்துக்கொள்ளும் இயல்பு / மறைகாப்புப்பழக்கம் (confidentiality) கரன் பேயர் (karen Bayer) என்ற சமூகப்பணியாளர் தன்னுடைய வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை தர மறுத்ததை, ஜாபி V . ரெட்மாண்ட் (Jaffe v. Redmond decision) வழக்கில் அமெரிக்க உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொண்டதே, சலுகை பெற்ற தொடர்பாடலுக்கு / சட்டவிலக்கு பெற்ற தொடர்பாடலுக்கு கிடைத்த சிறப்பான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
English
The premise and understanding between a professional and client that the information revealed by the client will not be divulged to others without expressed permission. In fact, the laws and judicial interpretations in each state are not always consistent or clear about this premise. Courts in many states have honored privileged communication for social workers and other professional groups, except when there is a risk of public danger or a threat to the public good. See also confidentiality, absolute confidentiality, relative confidentiality, and Jaffe v. Redmond decision.