probation
தெரிந்தாயும் நிலை, வேலைத் திறமையைக் கண்டறியும் காலம், சோதனைக் காலம், மேற்காணிப்பு
தமிழ் விளக்கம்
சமயம் புகுபவர்க்குரிய குறிப்பிட்ட கால அளவான புகுமுகத்தேர்வு நிலை, முதல்முறைக் குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனை முறையான விடுதலை, நன்னடத்தை சோதனை நிலை, தகுதிகாண் பருவம், பயிற்சிக்காலம்.
1. நிர்வாகத் துறையில், ஒரு பணியாளர் அவருக்கென ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யப் போதிய தகுதியும், திறனும் கொண்டவரா என்பதைத் தெரிந்தாய நிர்வாகம் எடுத்துக் கொள்ளும் கால அவகாசம். 2. நீதி பரிபாலனத்தில் முதல் குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனை முறையில், தண்டனை விதித்து சிறையில் அடைக்காமல், மாற்றுத் தண்டனை முறைகளான சமுதாய சேவை செய்ய உத்தரவிடுவது அல்லது நன்னடத்தைக் கண்காணிப்பில் வைத்திருப்பது போன்ற நடைமுறைகள்.

English
1. A specified time during which an individual is to demonstrate possession of certain abilities or qualifications. 2. In the corrections field, probation is a status in which incarceration is suspended on the condition that the subject fulfills certain requirements. These requirements often include periodic visits to a court-designated probation officer, who may be a social worker. See also community-based corrections.