problem
கடுவினா, ஐயப்பாட்டிற்குரிய செய்தி, புதிர், புரியாச் செய்தி, சிக்கல், மலைப்புத்தரும் செய்தி, விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி, செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை, ஆய்வுக்கரு, பிரச்சினை
தமிழ் விளக்கம்
போதுமான முன்மாதிரிகள் இல்லாததாலோ, விதிமுறைகள் இல்லாததாலோ பதிலளிக்கப்பட முடியாத கேள்விகள் அல்லது கையாளமுடியாத சூழ்நிலையைப் பிரச்சனை எனலாம். சமூகப் பிரச்சனைகள் என்பது அடிப்படையில் சமூக அமைப்பில் அல்லது சமூக நிறுவனங்களில் உள்ள குறைபாட்டை அல்லது நிறைவின்மையைக் குறிக்கும். ஒரு வாடிக்கையாளரின் பிரச்சனை என்பது அவருடைய தற்போதைய நிலைக்கும் அவர் எதிர்பார்த்து வாழ நினைக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறிக்கும்.
English
An unanswered question or unresolved circumstance involving deficiency from a norm or ideal. Social problems pertain to any deficiency from an ideal social structure or social institution. A client's presenting problem is a perceived deficit between the existing situation and the norm or ideal.