problem-pregnancy counseling

பிரச்சனையுள்ள கர்ப்பஸ்த்ரீகளுக்கான ஆலோசனை

தமிழ் விளக்கம்

இம்முறை பெரும்பாலும் திருமணமாகாத, கன்னிப் பெண்கள் கர்ப்பமடைந்ததை உறுதி செய்தபின், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்பு மற்றும் மனக்குழப்பத்தைக் கையாள, அவர்களுக்கு முன்னுள்ள வாய்ப்புக்களை எடுத்துரைத்து ஆலோசனை சொல்லும் முறை. உண்டான கருவை அழித்துவிடல், கர்ப்பத்திற்குக் காரணமானவரை திருமணம் செய்துகொள்ளல், குழந்தை பிறந்தபின் அதைத் தத்துக் கொடுத்து விடல், அல்லது தனியாக இருந்து குழந்தையை வளர்த்தெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அவர்களின் பரீசீலனைக்கு விடப்படும். அப்பெண்ணின் குடும்பத்தினரும், கர்ப்பத்திற்குக் காரணமான ஆணும் அவரின் குடும்பத்தினரும் உதவியாக இருப்பார்கள் என்று கருதப்படும் பட்சம், அவர்களும் கலந்தாலோசிக்கப்படுவார்கள். இருப்பினும், கர்ப்பமடைந்த கன்னிக்கே இறுதி முடிவு எடுக்கும் உரிமை உண்டு.

English

Therapeutic intervention with women who have psychosocial conflict about their pregnan- cies. The process is most often applied to young unmarried women and is oriented to educating them about available options. This occurs after determining, as early as possible, whether there actually is a preg- nancy. If tests are positive, then the options discussed include abortion, marriage, adoption, and rearing the baby alone. The father and family members are included in these discussions whenever possible and helpful, but the pregnant woman makes the ultimate decision.