problem-solving casework

பிரச்சனை தீர்வுக்கான (சமூகத்) தனியாளர் பணி

தமிழ் விளக்கம்

மானுட ஆளுமையின் வளர்ச்சியை, தன்மையை, பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள பல்வேறு கருத்தாக்கங்கள் சமூகப் பணியாளர்களுக்கு உதவுகின்றன. சிக்மண்ட் பிராய்டால் பிரேரிக்கப்பட்ட Diagnostic school (நுண்ணாய்வு அல்லது நோயியல்பு அறிதல்) ஓட்டோ ரேங்க் போன்றவர்கள் பரிந்துரைத்த functional school - (மனித செயல்சார்ந்த) கருத்தாக்கங்கள் சமூகப் பணியாளர்களுக்குப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும் அதைத் தீர்க்கவுமான வழிமுறைகளைக் காட்டுகின்றன. பிரச்சனைகளைத் தீர்க்க உள இயக்கத் (மனத்தின் இயங்கு) தன்மை, சமூக மாற்றங்கள் மனதின் மீது ஏற்படுத்திய தாக்கம், சிகிச்சை முறையில் அகநோக்குப் பார்வையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செய்யப்பட்ட சமூகப்பணி சிகிச்சை முறைகளை நுண்ணாய்வு அல்லது நோயியல்பறிந்து / பிரச்சனையறிந்து செய்யப்படும் சமூகப்பணி எனலாம். இதற்கு மாறாக, செயல்சார்ந்த சமூகப் பணி என்பது, பிராய்ட் பரிந்துரைத்த பிரச்சனையின் விரிவான வரலாறு, நோயறிதல் முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், ஒரு சமூகப் பணியாளரோ, சமூக சேவை நிறுவனமோ ஒரு பிரச்சனைக்கான தீர்வில் எப்படிப் பரீட்சார்த்தமாகச் செயல்பட்டு அதைத் தீர்க்கும் செயல்சார்ந்த வழிமுறைகளைக் கையாளுவதாகும். வாடிக்கையாளர்களின் நோயியல்பறிந்து செயலாற்றுதல், வாடிக்கையாளர்களின் செயலியல்பறிந்து செயலாற்றுதல் இரண்டும் சமூகப்பணியின் முக்கியமான அணுகுமுறைகளாகும். சமூகப் பணியில் தனக்கென தனிமுத்திரை பதித்த ஹெலன் ஹாரிஸ் பெர்ல்மென் (Helen Harris Perlman) அம்மையார், இந்த இரண்டு அணுகுமுறைகளையும் இணைத்து, பிரச்சனைத் தீர்வுக்கான (சமூகத்) தனியாளர் பணி என்று சமூகப்பணிக்கே உரித்தான தனித்தன்மை கொண்ட அணுகுமுறையை உருவாக்கினார். இந்த அணுகுமுறை அகநோக்கு (Ego psychology) உளவியல், சமூக ரீதியாக வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களை முன்னுதாரணமாக்கி நடக்கத் தூண்டும் பழகுமுறை அல்லது செயல்பாங்கு கோட்பாடு (Role Theory), நோயியல்பறிந்து செயல்படல் (Diagnostic School), செயல்சார்ந்த அணுகுமுறை (Functional School) போன்ற பலவற்றை ஒருங்கிணைத்த அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறையில் சமூகம், சுற்றுச் சூழல் மற்றும் வாடிக்கையாளர் (மற்றும் அவரது பிரச்சனை) ஒன்றின்மீது ஒன்று ஏற்படுத்தும் பரஸ்பர தாக்கங்களைப் (நேர்மறை மற்றும் எதிர்மறை) புரிந்து கொண்டு, தெளிவான குறிக்கோள்களை நிர்ணயித்து, காலவரையறைக்குட்பட்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தியது.

English

A form of social casework, developed primarily by Helen Harris Perlman (Casework: A Problem-Solving Process, Chicago: University of Chicago Press, 1957), that draws on concepts in ego psychology, role theory, and, implicitly, on a consolidation of the diagnostic school in social work and the functional school in social work. Among the most important practice methods this model stresses are clear delineations of the goals of the casework intervention, focused and time-limited intervention, and concern for the environmental and social forces that influence and are influenced by the client.