Procedural Terminology for Psychiatrists (PTP)
மனநோய் மருத்துவர்களின் செயல்முறைகளைக் குறிக்கும் கலைச்சொற்கள்
தமிழ் விளக்கம்
மனநோய் மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகள் சொல்லும் நோய்க்குறிகளையும், சிகிச்சை முறைகளைப் பட்டியிலிடவும், குறியீடுகள் மூலமாகக் குறிக்கவும் பயன்படுத்தும் துறை சார்ந்த கலைச்சொற்கள். இந்தக் கலைச்சொற்கள் மருத்துவர்கள் பயன்படுத்தும் வழக்கமான செயல்முறைகளைக் குறிக்கும் கலைச்சொற்கள் தான் என்றாலும், மருத்துவரல்லாத பிற மருத்துவப் பணியாளர்கள் (துணை மருத்துவப் பணியாளர்கள் allied health workers) இந்தக் கலைச்சொற்களை தங்கள் பதிவு ஏடுகளில் பயன்படுத்த அனுமதி இல்லை.
English
A systematic listing and coding of procedures and services performed by psychiatrists on behalf of their patients. PTP is a part of the physician's Current Procedural Terminology (CPT). Services of non- physicians are not included in the PTP codes, and nonphysicians should not use them to report services.