process-and-content issue
அறிவா? செயலா? என்ற விவாதம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியில், சமூகப்பணியாளர்களின் விஷய ஞானம் (உள்ளடக்கம்) பெரிதா? அல்லது அவர்களின் செயல் (பணித்) திறன் பெரிதா? என்ற கருத்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றது. சமூகப் பணியின் உள்ளடக்கம் (விஷய ஞானம்) சமூகப் பிரச்சனைகளின் தன்மை, பிரச்சனையைக் கண்டறிவதற்கான வழிமுறைகள், பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வகைதுறை வாய்ப்புக்கள், பிரச்சனையினால் பாதிக்கப்படும் மக்கள் போன்றவற்றை அறிவதில் கவனம் செலுத்தும். சமூகப்பணியின் செயல்திறன் என்பது ஒரு பிரச்சனையை எப்படித் தீர்ப்பது, யாரைத் தொடர்பு கொண்டு பேசுவது, அப்பிரச்சனையோடு தொடர்புடையவர்களை எப்படி ஒருங்கிணைப்பது போன்ற செயல்சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்தத் தூண்டும்.
English
See content- and-process issue.