process recording

செயல்முறைகள் பற்றிய பதிவுகள்

தமிழ் விளக்கம்

சிகிச்சையின் போது சமூகப்பணியாளரும் அவரின் வாடிக்கையாளருக்குமிடையே நடக்கும் தொடர்பாடலைப்பற்றிய எழுத்துப் பதிவுகள். செயல்முறைகள் பற்றிய பதிவுகளில் வாடிக்கையாளரைப் பற்றிய முகப்புப் பக்கத்தோடு தொடங்கி, அவரைப் பற்றிய சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல், உடல் ரீதியான தகவல்களோடு தொடங்கும். பிறகு வாடிக்கையாளர் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றியும், அதைப்பற்றிய தரவுகளையும் கொண்டிருக்கும். அதையடுத்து சிகிச்சையின் குறிக்கோள்கள் பற்றியும், அதை அடைவதிலிருக்கும் சிரமங்கள் பற்றியும், அதைக்கடந்து குறிக்கோள்களை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும் குறிக்கப்பட்டு, அதனடிப்படையில் வாடிக்கையாளரிடம் செய்துகொண்ட ஒப்பந்த நகல் இணைக்கப்பட்டிருக்கும். பின் வாடிக்கையாளர் மற்றும் சமூகப்பணியாளர் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டதைப் பற்றிய குறிப்புகளும், வாடிக்கையாளரைப் பற்றி அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் கொடுத்த தகவல்கள் பற்றிய பதிவுகளும் இருக்கும். ஒவ்வொரு சந்திப்பு நடந்த தேதி, நேரம், அறிந்துகொண்ட தகவல்கள், அதைப்பற்றிய சமூகப்பணியாளரின் மதிப்பீடுகள் குறிக்கப்படும். வாடிக்கையாளருடன் நடந்த உரையாடல்கள் சொல்லுக்குச் சொல்லாக குறிக்கப்படாவிட்டாலும், கால நேர வரிசைப்படி துல்லியமாகக் குறிக்கப்பட்டிருக்கும். சமீப காலமாக அறிமுகமான சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சமூகப் பணியின் தொழில் நெறிமுறைகள் போன்றவை, சமூகப்பணியாளர்கள் தங்கள் பதிவுகளைத் தேவைப்படுவோருக்கு (வாடிக்கையாளர், சக சமூகப்பணியாளர் மற்றும் காப்பீடு நிறுவனங்கள்) கொடுக்குமளவிற்கு முறையாகவும், தெளிவாகவும் இருக்கவேண்டுமென்று நிர்பந்திக்கின்றன, சமூகப்பணியாளர் இல்லாத போது, வாடிக்கையாளரைப் பற்றிய தகவல் பெறவும், வாடிக்கையாளரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூகப்பணியின் செயல்தரத்தை மதிப்பீடு செய்யவும் செயல்முறைப் பதிவுகள் பயன்படுகின்றன.
பார்க்க: Narraive Record - வரிசைப்பட செறிவாக எடுத்துரைத்தல், செறிவான நிகழ்முறை அறிக்கை, விரிவான அறிக்கை, விரிவறிக்கை, கதைச்செறிவு, வருணனை, செறிவான எடுத்துரைப்பு - சமூகப்பணியாளர் அக்கறை கொண்டுள்ள, பரிந்தாதரித்துச் செயல்படுகிற, தலையிடும் சமூக நிகழ்வைப் பற்றிய தகவல்களை விவரமாக எடுத்துரைக்கும் பதிவு முறை. ஒரு நிகழ்வில் தான் அக்கறை எடுத்துக்கொண்டதற்கான நியாயம், தான் பின்பற்றிய வழிமுறைகள், அதனுடைய விளைவுகள், அதைப்பற்றிய முன்கனிப்பு, தன்னுடைய பரிந்துரைகள் போன்ற விவரங்களை சமூகப்பணியாளர் பதிவு செய்யும் முறை. சமூகப்பணியாளர்கள் சமூக நிகழ்வைப் பற்றி பதிவு செய்யும் போது மிகச் செறிவான முறையில், அந்த நிகழ்வின் போக்குகள், தன் தலையீட்டிற்கு முன்னரே தான் உணர்ந்து கொண்டது, தன் சார்பாக எடுத்த முயற்சிகள், மற்றும் அதைப்பற்றிய ஒட்டுமொத்த முடிவுகள் போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

English

A method of writing about the social worker-client interactions during the intervention process. The case record using this format begins with a face sheet of factual data about the client and relevant social, environmental, economic, and physical factors. Then it briefly describes the presenting problem and includes documenting data about the problem. The social worker then includes a statement of goals, obstacles to reaching the goals, means to reaching them, and-where applicable-a written contract signed by social worker and client. The record then contains entries for each contact the client makes with the social worker or agency, including telephone calls and messages from other family members. The entry is headed by the date and time of the visit or contact and a summary of the factual information obtained as well as any subjective impressions the social worker has developed. These entries are not as elaborate as those in verbatim recording but are more chronologically stated than in the problem-oriented record (POR) or person-oriented record. Because of recent legislation, court rulings, and ethical principles, social workers are often advised to prepare their records so they are accessible to other social workers, clients, peer reviewers, or providers of third-party payments. This is to protect the client's rights during emergencies, when the social worker is inaccessible, or in cases of quality assurance evaluations and peer review. See also narrative summary.