prochoice movement
விருப்புரிமை இயக்கம், சுய நிர்ணய ஆதரவு இயக்கம்
தமிழ் விளக்கம்
குழந்தை பெற்றுக்கொள்வதோ அல்லது கருக்கலைப்பு செய்துகொள்வதோ ஒரு பெண்ணின் சுயவிருப்ப உரிமையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிற இயக்கம். ஒரு பெண்ணின் இனப்பெருக்க உரிமை மீது, ஆணுக்கோ, அரசுக்கோ, பிற சமூக, மத சக்திகளுக்கோ உரிமை இல்லை என்ற கருத்தினடிப்படையில் உருவான இயக்கம். இதைக் கருத்தடைக்கு ஆதரவான இயக்கம், திட்டமிட்ட குடும்பத்திற்கு, குடும்பக் கட்டுப்பாடு முறைகளுக்கு ஆதரவான இயக்கம் என்றும் கொள்ளலாம். பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை, குழந்தை பெற்றுக்கொள்ளும் அல்லது கருக்கலைப்பு செய்துகொள்ளும் வாய்ப்புக்களை விரிவுபடுத்தத் தேவையான பொதுக்கருத்தை உருவாக்குதல், அதற்கு ஆதரவான சட்ட வரைவுகளைக் கொண்டுவருதல், கருக்கலைப்பிற்கும் பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான / ஆதரவான வசதிகளைச் செய்துதரல், அதற்கான நிதி திரட்டுதல் போன்ற முயற்சிகளில் இந்த இயக்கம் ஈடுபட்டுள்ளது. கருத்தடைக்கு எதிரானவர்கள் நடத்திய 'வாழ்விற்கு ஆதரவான இயக்கம்' (prolife) என்பதை எதிர்க்கும் முகமாகவே 'விருப்புரிமை இயக்கம்' என்று பெயரிட்டனர்.
English
Organized efforts to influence public opinion, legislation, judicial interpretations, and legal enforcement and to gain financial support and medical access that are considered necessary for maximizing reproductive choices, especially keeping the option of abortion legal and accessible. The name of this movement came about primarily as a response to the name used by those who were fighting against abortion, known as the "prolife movement." The prochoice movement advocates education, family planning, and opportunities for pregnant women to choose abortion, adoption, or to keep their babies. See National Abortion Rights Action League (NARAL) and Planned Parenthood Federation of America.