prodromal phase

நோய்த் தொடக்க நிலை, நோயறிகுறி நிலை

தமிழ் விளக்கம்

பார்க்க: schizophrenia - சித்தப்பிறழ்வு - ஸ்கிசோஃப்ரினியா என்றழைக்கப்படும் பிளவுபட்ட மனநோய் என்ற சொல்லாடல் கிரேக்க மொழிச் சொல்லான Skhizein -'to split' மற்றும் phren - 'diaphragm, heart, and mind” ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. இது மெய்யான புறவுலகை உணர்ந்தறிவது, அதை எடுத்துச் சொல்வது ஆகியவற்றில் ஏற்படும் பிறழ்வு மன நோய். உணர்ந்தறிவதில் உண்டாகும் பிறழ்வானது, பார்வை, கேட்கும் திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களையும் பாதிக்கலாம். சிந்தனை, உணர்வு, பிறருடனான தொடர்பு, நடத்தை போன்றவைகளைப் பாதிக்கும். மனச்சிதைவு நோய் என்பது எல்லோருக்கும் புரியக்கூடிய சில நோய்க்குறிகளின் சேர்க்கையாகவே உள்ளது. அந்நோய்க்குறிகளாவன: 1. தர்க்கரீதியற்ற சிந்தனைகள். 2. விநோதமான உணர்வுகள். 3. பிறழ்வு நம்பிக்கைகள். 4. மாயக்குரல்கள் மற்றும் மாயக்காட்சிகள். 5. இயக்கங்களில் ஏற்படும் தடைகள். 6. செயல்பாடுகளில் மந்தநிலை 7. தங்கள் தோற்றம் குறித்த அக்கறையின்மை 8. மனச்சோர்வு மனநிலையால் பாதிப்பு 9. நடத்தை முறையில் மாற்றங்கள் 10. விநோதமான கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளுதல் 11. சிந்தனை முறையில் பாதிப்பு, 12. மாற்றமடையும் உணர்வு நிலை 13. மாயக்குரல்கள். மனச்சிதைவு நோயில் ஐந்து வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. 1. உணர்விழப்புடன் கூடிய மனச்சிதைவு (catatonic schizophrenia) 2. கருத்துத் திரிபு மனச்சிதைவு, பிறர் மீது நம்பிக்கையில்லாததோடு அவரைக்கண்டு அஞ்சுகின்ற மனச்சிதைவு (Paranoid schizophrenia) 3. ஒழுங்குமுறையற்ற மனச்சிதைவு (Disorganized schizophrenia) 4. வகைப்படுத்தமுடியாத மனச்சிதைவு (Undifferentiated schizophrenia) 5. தேங்கி விட்ட / எஞ்சியிருக்கும் மனச்சிதைவு (Residual schizophrenia) தற்போது மேலும் இருவகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன 1. ஸ்கிசோஃப்ரினியாவுக்குப் பிந்தைய மனத் தளர்ச்சி 2. எளிய ஸ்கிசோஃப்ரினியா.
இந்நோயை குணப்படுத்துதல் என்பது சர்ச்சசைக்குரியதாகவே உள்ளது. அண்மையில், அறிகுறிகள் குறைவதை அறிவதற்கான அளவுகோல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், குணப்படுத்துதல் என்பதன் வரையறை பற்றி ஒருமித்த கருத்து இல்லை. இந்த நோயைக் கையாள்வதில் உளநிலை மாற்றி மருந்துகள், ஊக்குவிப்பிகள் (உளத்திறன் ஊக்குவிக்கும் மருந்து, ஊக்கமளிக்கும், சுறுசுறுப்பைக் கூட்டும் மருந்துகள் (antidepressant medicationsl), பதட்டத் தணிப்பிகள் (antianxiety drugs), உளப்பிணி போக்கும் மருந்துகள் (anti-psychotic medication), உளக்கிளர்ச்சி தணிப்பிகள் (antimanic medication).என்று பல மருந்துகள் பயன்படுகின்றன. அத்துடன் உளப்பிணி சிகிச்சை (pschotherapy), சமூகச் செயல்பாட்டை மேம்படுத்துவது, குழு சிகிச்சை போன்ற முறைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை முறைகளாகக் கையாளப்படுகிறது

English

The early stages of a disease. See also schizophrenia.